உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் -14

காண்டார்கள்; மற்றிருவர் கைத்துப்பாக்கிகள் இரண்டைத் தம் கைகளில் ஏந்திப் பிடித்துக்கொண்டார்கள். இவர்களைப் பார்த்த வுடனே இவர்கள் இன்னார், இவர்கள் நோக்கம் இன்னது என்னும் வகைகள் உடனே புலப்பட்டன. மக்களாய்ப் பிறந்தவர்களில் இத்தகைய கொடுந்தோற்றமுங் கொலை செய்யுந் தீர்மானமும் உடையவர்களை இதற்கு முன் யான் எங்குங் கண்டதில்லாமையால், இவர்களைக் கண்டவுடனே என்னுயிர் என்னுடம்பை விட்டுப் போனதெனக் களைத்துப் பின்னே சாய்ந்து விட்டேன். இத்தகைய தொரு நிகழ்ச்சியைக் கனவிலே கண்டு கைகால் அசையாமலும் நா எழாமலுங் கட்டைபோற் கிடக்கும் ஒருத்திக்கும், விழிப்பு நிலையில் அங்ஙனமே இருந்த எனக்கும் ஏதொரு வேற்றுமையுமே இல்லை. ஆனாலும், என்னைச் சூழ நடப்பது இன்னதென்னும் ஓர் உணர்வு மட்டும் எனக்கு அப்போதிருந்தது. யான் இந்த நிலைமையை அடைய, அந்தப் பாரசிக அன்னையார் அவர்களைக் கண்டதும் 'ஐயோ!' என ஓர் ஓலமிட்டுத் தம் மகளை அணைத்த படியாய் மூச்சிழந்து உணர்வற்றுச் சாய்ந்து விட்டார். அந்தப் பெரிய பெண், அன்னையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர்க்கு பின்னே பதுங்கிக்கொண்டனள். வந்த அக்கள்வர்கள் எல்லாரும் முதலில் எங்களுக்குத் தெரியாத ஒரு மொழியிற் பேசினர். ஆனால், அவர்களிற் சிலர் யானிருந்த வண்டியண்டை வர ஒருவன் தன் கையிலிருந்த விளக்கு வெளிச்சத்தை எங்கள் மூவர்மேற்படும்படி பிடித்தான். அவர்களுள் ஒருவன் மற்றொருவனைப் பார்த்துத் தமிழில் 'நல்ல காலமாய் இவர்கள் மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள். அந்த வண்டியிலேயுள்ள பார்சிகக்காரனுக்கும் பிராமணப் பையனுக்கும் மூக்கிலே மயக்க மருந்து பிடித்து அவர்களையும் நம்ம வண்டி ஒன்றில் ஏற்றிவிட்டோம். இவர்களுக்கும் மூக்கில் அந்தமருந்தைப் பிடிப்போமா?” என்று கேட்டான். அதற்கு மற்றவன் ‘ஆமா! நம்ம துப்பாக்கிகளுக்குங் கத்திகளுக்கும் வேலை யில்லை!” அந்தப் பாரசிக்காரன் முதலில் நம்மை எதிர்க்கப் பார்த்தான். ஆனால், துப்பாக்கியை நான் அவன் தலைக்கு நேராய்ப் பிடிக்கவே அவன் திகில்கொண்டு பின்வாங்கினான். இதற்குள் மயக்க மருந்தை அவன் மூக்கில் பிடித்து நீ அவனை மூர்ச்சை அடையச் செய்துவிட்டாய். காரியம் எளிதாய் முடிந்தது.” என்று கூறிக்கொண்டே என்னைச் சுட்டி “இந்த முண்டைச்சியைத் தான் நாம் கொண்டுபோக வேண்டியது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/227&oldid=1582383" இலிருந்து மீள்விக்கப்பட்டது