உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

197

வழிதப்பிச் செல்வதால், போகவேண்டிய வழியில் அவற்றைத் திருப்பச் சொல்லுகிறாரென்று கருதினோம். மழை சிறிது ஓய்ந்தது.வண்டிகளோ படுவேகமாய்ச் சென்றன. உடனே நாங்கள் மிகவும் அஞ்சிச்சாளரக்கதவுகளைக் கீழ் இறக்கிவிட்டு வெளியே பார்க்க ஒரே இருளாயிருந்தது. விளக்குவெளிச்சம் ஏதுங் காணப்படவில்லை. அந்தப் பாரசிகப் பெருமான் வண்டியை நிறுத்தச் சொல்லி அடுத்தடுத்துக் கூவும் ஒலி பின்னேயிருந்து கேட்டது. இப்போது அவர்கள் வண்டி எங்கள் வண்டிக்குச் சிறிது எட்ட இருப்பதாக அறிந்து திகில் கொண்டோம். “அம்மா ஈது ஏதோ ஆபத்தாக இருக்கின்றதே! நாம் பம்பாய்க்கு வெளியே காட்டு வழியாய்ச் செல்வதாகவன்றோ புலப்படுகின்றது! நெடுநேரமாய் ஐயா கூவுகிறார்கள்! இந்த வண்டிக்காரர்கள் அவற்றைக் கேளாதவர்கள் போல் மிகு விரைவாய்

ஒட்டிக்கொண்டு போகிறார்களே!" என்றேன். அம்மையாரும் மிக அஞ்சி நடுங்கினவர்களாய் “ஈது ஏதோ இரண்டகமாகத்தான் இருக்கின்றது. ஆயினும் அஞ்சாதே! நாமும் வண்டியை நிறுத்தச் சொல்லிக் கூவுவோம்!" என்று சொல்லி உரத்துக் கூவினார். அவர்களது மெல்லிய குரலொலி கீழ்க்கையடித் தாற்போல் இடைவெளியை ஊடுருவிச் சென்றது. அதே நேரத்தில் வேறு ஒரு கீழ்க்கையொலி எங்களுக்கு முன்னே சற்றுத் தொலைவி லிருந்து வரக்கேட்டோம். உடனே வண்டிக்காரன் கடிவாளத்தைப் பிடித்திழுத்துக் குதிரைகளை நிறுத்தத் துவங்கினான். இதற்குட் பின்னே வந்த எங்கள் வண்டியும் அருகில் வந்து நின்றது. அந்தப் பாரசிகப் பெருமான் வண்டிக்காரர் மேல் மிகவுஞ் சினங் கொண்டவராகி, அவர்கள் வழி தப்பி வண்டியைக் கொண்டு வந்ததற்காக அவர்களை அச்சுறுத்திப் பேசித் திரும்ப வண்டியை நகரத்திற்குள் திருப்பும்படி கட்டளையிட்டார்.வண்டிக்காரர்கள் ஏதுமே விடை சொல்லவில்லை. இதற்குள் வேறிரண்டு பெட்டி வண்டிகள் எங்களுக்கு எதிர்முகமாயிருந்து கடுவிரைவில்வந்து எங்கள் வண்டிகளின் பக்கமாய் நின்றன. அவ்விரண்டிலிருந்து நீண்டு வலியரான எட்டுப் பெயர் இறங்கினர். அவர்களில் இருவர் கைகளில் இரண்டு சிறு கூண்டு விளக்குகள் ஏற்றப்பட்டன. அவர்கள் எல்லாருந் தம் முகங்களிற் கரியமையைக் குழைத்துப் பூசி,முழுக்கறுப்பான மேற்சட்டை காற்சட்டை அணிந்திருந்தனர். இருவர் தம் காற்சட்டையிற் கட்டியிருந்த உறையிலிருந்து நீண்ட கூர்ங்கத்திகள் இரண்டை இழுத்துக் கையிற் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/226&oldid=1582374" இலிருந்து மீள்விக்கப்பட்டது