உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் -14

பொன்மினுக்குப் பூசிய உயர்ந்த உயர்ந்த புத்தக வரிசைகள் வைத்திருக்கும் பான்மையும் பிறவும் என் ஒரு நாவால் எடுத்துரைக்க ஏலாதன. தெருக்களுங் கட்டிடங்களும் விளக்குத் தூண்களுந் தூயவாய் ஒழுங்காய் அமைந்திருக்குந் திறம் பெரிதும் வியக்கற் பாலதாயிருக்கின்றது. பம்பாய் நகரம் வானின்கண் உள்ள இந்திரனுலகுதான் என்று முன்னே பலர் பலகாற் சொல்லக் கேட்ட சொல் முற்றிலும் உண்மையென்றே தெளிந்தேன்.

.

இப்போது வைகாசிமாதக் கடைசி. இந்தக் காலத்திற் சன்னை பக்கத்திற் கடுவேனிற்பருவமாயிருக்க, இங்கே மப்பும் க மந்தாரமும் மழையுமாயிருக்கக் காண்கின்றேன். நாங்கள் வண்டித் தாடரிலிருந்து இறங்கும் போதேவானமெல்லாம் இருண்டு. குளிர்ங்காற்று வீசியது. இப்போது குதிரை வண்டியிற் செல்கையில் வானத்தின்கண் இடிமுழக்கமும் மின்னல் ஒளியும் இடையிடையே தோன்றலாயின. மழைத்துளிகளுஞ் சிதறின. காற்று மும்முரமாய் வீசவே, மழைத்திவலைகள் வண்டிக்குள் இருக்கும் எங்கள்மேற் பட்டன. அதனால், நாங்கள் சாளர கதவுகளை இழுத்துச் சாத்த வேண்டியதாயிற்று. வெளியேயுள்ள காட்சிகளை இப்போது நான் பார்க்கக் கூடாமை பற்றி மனம் வருந்தினேன். சென்ற பதினைந்து நிமிஷங்களாகச் சென்றது போலல்லாமல் இப்போது எங்கள் வண்டிகள் மிக விரைந்து செல்லலாயின. குதிரைக் குளம்படிகளின் ஓசை முன்னையிலும் உரத்துத் தோன்றின. வண்டிக்காரர் இருவருங் குதிரைகளை அடுத்தடுத்துச் சாட்டையால் அடிக்கும் ஒலி எனக்கு அச்சத்தை உண்டுபண்ணியது.வண்டித் தொடர்நிலைக்கும் நாங்கள் போய்ச் சேரவேண்டிய இருக்கைக்கும் அரைமணி நேர ஓட்டந்தான் என்று முன்னே நாங்கள் கலந்து பேசுகையில் தெரிந்து கொண்டேன். ஆனால், இப்போது அரைமணி நேரத்திற்கு மேலாயிருக்குமென்று என் மனத்திற்பட்டது. அதைப் போலவே அந்த அம்மையார்க்கும் பட்டது. “என்ன! வண்டி வழி தப்பிப் போவதுபோற் காணப்படுகின்றதே!” என்று அம்மையார் சிறிது பதைப்போடு கூறினார்கள். இச்சொற்கள் கூறி முடிப்பதற்குள் பின்னேவரும் வண்டியிலிருந்த அந்தப் பாரசிக கனவான் கூவும் ஒலி கேட்டது. சிறிது நேரமாய் மழை சோவென்று பெய்து கொண்டிருந்தமையால் அவர் யாது சொல்லுகிறாரென்பது எங்கட்குப் புலப்படவில்லை. ஆனாலும் வண்டிக்காரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/225&oldid=1582366" இலிருந்து மீள்விக்கப்பட்டது