உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

195

செல்லக்கூடிய வேறு ஆண்பிள்ளைகளில்லாமையாலுந், தமக்கு வேண்டியனவெல்லாம் ஏவற்காரர்கள் வெளியே போய்ச் செய்து வந்தமையாலுந் தமக்குப் பயன்படாமை கண்டு தம்மிட மிருந்த தம்மிடமிருந்த உயர்ந்த வண்டி குதிரைகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். நாங்கள் இங்கே வந்தபிறகும் பலவகையான குழப்பங்கள் நேர்ந் தமையால் நாங்களும் இன்னும் வண்டி குதிரை வாங்கவில்லை. இன்னுஞ் சிலநாளில் அவற்றை வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருக் கிறார்கள்” என்று கூறினார்கள். எங்கள் வண்டிகளிரண்டும் விரைந்து செல்லுவன ஆயின.

யான் வண்டியிலிருந்தபடியே சாலையின் இருபுறத்துமுள்ள காட்சிகளை நோக்கிக்கொண்டு சென்றேன். சீமைப்பண்டங்கள் உள்நாட்டுப் பண்டங்களெல்லாம் விற்குங் கடைவீதிகளின் ஊடே வண்டிகள் செல்லும்படி, என் பொருட்டு அந்தக் கனவானவர்கள் கட்டளையிட்டிருந்தமையால் மிக அழகிய தருக்களிலே எங்கள் வண்டிகள் சென்றன. தெருக்களின் இருபுறத்துமுள்ள அழகிய மாளிகைகள் ஒவ்வொன்றும்மூன்றடுக்கு நான்கடுக்குகள் உடை யனவாய் உயர்ந்து காணப்பட்டன. அக்கட்டிடங்களிலுள்ள விளக்கினொளிகளும், அவற்றின் புறத்தே தெருக்களில் நிரை நிரையாக எரியும் ஆவி விளக்குகளின் ஒளிகளும், அம்மாளிகை களின் மேன் மெத்தைமேல் உயர்ந்த சிவப்பு நீலம் பச்சை முதலிய நிறம் மிளிரும் பட்டாடைகள் உடுத்து மின்னற்கொடி துவண்டாற் போல் உலவும் மிக அழகிய மாதர்களின் தோற்றமும், சில மாளிகைகளின் புறத்தே கண்ணாடிக் கதவுகள் மினுமினுவென்று தோன்ற அவற்றின் உள்ளே பலதிறப்பட்டாடைகளும் பளிங்குச் சாமான்களும் பொன் வெள்ளியிற் செய்த கலங்களும் பல விலை யுயர்ந்த மணிகளிற் செய்த அணிகலன்களும் உயரப் பலகை களிற்றைத்த மென்பட்டின் மேன் மிகவும் நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்குங் காட்சியும், சில கடைகளில் வெள்ளைக்காரர் பாரசிகரைப்போல் ஆண் வடிவிலும் பெண் வடிவிலும் செய்யப் பட்ட பதுமைகள் உயிருள்ளனபோல் நிறுத்தப்பட்டிருக்கும் எழிலும்,வேறு சிலவற்றில் உணவிற்காக விற்குங் கொடிமுந்திரி மா செவ்வாழை அன்னதாழை சீமை இலந்தை சீமைஅத்தி நாரத்தை முதலான கணக்கிறந்த பசிய பழவகைகள் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும், இன்னுஞ் சிலவற்றின்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/224&oldid=1582357" இலிருந்து மீள்விக்கப்பட்டது