உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் -14

ஐயா இவனைப்பற்றிச் சில குறிப்புகள் தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்கள். அவரிடமிருந்து வந்த விடையில் தமக்கும் அவனுக்கும் முன்னே சிலகாலம் நெருங்கிய நட்பு இருந்தது உண்மையே யென்றாலும் பிறகு இவன் இயல்புகளுஞ் சொற்களுஞ் செயல்களுங் கூர்ந்து பார்க்கப் பார்க்க ஏதோ கள்ளம் உடையன வாய்த் தம் மனத்திற்குப் பட்டமையால் அவனது நேசத்தை வரவர நழுவவிட்டதாகவும் இடையே நீ எழுதிய கடிதத்திலும் இவனுடைய நட்பு விலக்கத்தக்கதேயன்றி விரும்பத்தக்கதன்று என்று குறிக்கப்பட்டிருந்ததாகவுந் தெரிவித்த தோடு, இவனை அவர் எங்களிடம் போகும்படி அனுப்ப வில்லையென்றும், இவன் சிகந்தராபாத்திலிருந்து பம்பாய்க்கு வந்ததே தமக்குத் தெரியாத தென்றும் வரைந்திருந்தார். அதுமுதல் ஐயா இவனை எங்கள் வீட்டுக்கு வர இடங்கொடுப்ப தில்லை. இவனுக்கு வேலை எங்குங் கிடைக்கவில்லையென்றுஞ் சொல்லிவிட்டார். என்றாலும், இவன் தானாகவே இடைக் கிடையே வருகின்றான். இவனுக்கச் சுணையில்லை. முகங்கொடுத்துப் பேசாதிருக்கையிலும், இவன் வருவது எங்கட்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும், ஐயா அவர்கள் மிகுந்த இரக்கம் உடையவர்களாதலால் இவனை முகங்கடுத்துப் பேசமாட்டாமலிருக்கின்றார். இவன் ஏதோர் அலுவலுமின்றி இங்குமங்குமாய் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் இவன் ஏதோ ஒரு பொல்லாத நோக்கம் உடையவனாய்க் காணப்படுகின்றான்' என்று சொன்னார்கள். இதற்குள் எங்கள் சாமான்களெல்லாம் வண்டிமேலேறி விட்டமையால், அந்தப் பெருமானவர்கள் என்னையும் அந்த அம்மா அவர்களையும் மூத்த பெண்ணையும் ஒருவண்டியில் ஏற்றிவிட்டார்கள். தாமும், என் தமையனும் சிறுபையனும் மற்றொரு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். பிறகு வண்டிக்காரர் இருவருக்குந் தாம்போய்ச் சேரவேண்டிய டம் இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லியபின் எங்கள் வண்டியை முன்னுந் தம் வண்டியைப் பின்னுஞ் செலுத்தும் படி அப்பெருமான் கற்பித்தார். இவர் இங்ஙனம் இடங்குறிப்பிட்டு சொல்லியது "இவ்விரண்டு வண்டிகளும் வாடகை வண்டிகளோ?" என்று அம்மையாரைக் கேட்டேன். 'ஆம் அம்மா, ஐயாவின் தமையனார் நீண்டகாலம் வெளியே செல்லக்கூடாதபடி கீல்பிடிப்பு நோயிலிருந்தமையாலுந், தம்மைத் தவிர வெளியே

66

.

66

காண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/223&oldid=1582349" இலிருந்து மீள்விக்கப்பட்டது