உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

193

சீட்டுக் கொடுக்குமிடத்தே அதனைச் செலுத்திவிட்டு, புறம்பே வந்தோம். எங்களுக்காக, உயர்ந்த அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட இரண்டு நேர்த்தியான பெட்டி வண்டிகள் வந்து நின்றன.

6

நாங்கள் அந்த வண்டிகளில் இன்னும் ஏறவில்லை; வண்டிக்காரர் எங்க மூட்டை முடிச்சகளையும் பெட்டிகளையும் எடுத்து வண்டியின்மேல் வைத்துக்கொண்டிருந்தார்கள். யான் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்து, அந்த அம்மையாரிடம் அவற்றின் விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, கரியநிறமுங்குள்ளவடிவுங் கூழைக்கையும் உடைய ஒருவன் அந்தப் பக்கமாய்ச் சென்றவன் எங்களைவிட்டுப் பத்தடி அகன்றுநின்ற எங்கள் பாரசிக கனவானைப் பார்த்து அவரிடம் வந்து சலாம் பண்ணி ஆங்கிலத்திற் சிலபேசினான். அவர் அவனுக்குச் சுருக்கமாகச் சில மொழிகளை முகங்கொடாமல் விடையாகச் சொல்ல, அவன் அவற்றைக் கேட்டுக்கொண்டு விரைந்து போய்விட்டான். அவன் போனவுடனே அப்பெருமாட்டியார் என்னை நோக்கிக் “குழந்தாய் இவன்தான் நம் தெய்வநாயகத்தின் நண்பன் சேதுராமன்' என்று சிறிது அருவருப்போடு கூறினார்கள்.

அதனைக்கேட்டதும் என் மனந்திடுக்கிட்டது. அவனது அந்தங்கெட்ட வடிவத்தைப் பார்த்தவுடனே இன்னதென்று சொல்ல முடியாத ஒரு கலவரம் என் மனத்தே தோன்றிற்று. உடனே யான் அவ்வம்மையாரவர்களைப் பார்த்து ‘அம்மா, சிகந்தராபாத்திலிருந்த இவன் இங்கே எப்போது வந்தான்? தங்கட்குத் தெரியுமா?” என்று கவலையோடு வினாவினேன்.

66

"குழந்தாய், நாங்கள் உன்னைவிட்டுப் பிரிந்து இங்கேவந்து சேர்ந்த ஒரு வாரத்திலெல்லாம் இவனும் இங்கேவந்து எங்களைக் கண்டான்.சிகந்தராபாத்தில் ஆறேழு மாதங்கள் வரையிலிருந்து முயன்றும் அங்கே ஏதும் அலுவல் கிடைக்கவில்லையாம். அதன் மேல் அவன், தெய்வநாயகம் எங்களிடந்தன்னை அனுப்பியதாகச் சொல்லி, ஏதேனும் ஓர் அலுவல் பார்த்துத் தரும்படி ஐயா அவர்களிடம் பலகால் வந்து கேட்டான். அப்போது இங்கே எங்கள் குடும்பத்தின் நிலை மிகவுங்குலைந்திருந்தமையால், இவனிடத்திற் கருத்துவையாமல் இன்னும் ஒரு மாதங் கழித்துப் பார்ப்போம் என்று ஐயா சொல்லிவிட்டார்கள். 'பிறகு இங்கே குடும்பஞ்சீர்ப்பட்டதும், தெய்வ நாயகத்திற்கு எழுதிய கடிதத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/222&oldid=1582341" இலிருந்து மீள்விக்கப்பட்டது