உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

192

மறைமலையம் -14

ஒளிவீசின.வண்டி நிலையின் அகன்றுயர்ந்த அழகிய அமைப்பும், அதற்குள் எங்கள் வண்டி விரைவாக ஒருவகையில் இருபுறத்தும் நின்ற நேர்த்தியான வண்டித் தொடர்களின் வரிசையும் இன்னதென்று கூறலாகாப் புதுமையும் வியப்புங்கலந்த ஓர் உணர்வினை என்பால் எழுப்பிவிட்டன. இதனோடு, எமக்கு உயிர்போற் சிறந்த அப்பாரசிகப் பெருமாட்டியாரையும் பெருமானையுங் காணுதற்கு ஓர் இமைப்பொழுது தான் இடையே தடையாயிருக்கின்றதென என்னுள்ளம் பொறாமல் மிகவிரைந்தது. வண்டி நிலையில் வந்து தங்கியது. வண்டி யினுள்ளிருந்த பயணக்கார ரெல்லாந் தத்தம் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு சிலர் ஆத்திரத்தோடும், சிலர் சிறிது அமைதியோடும் இறங்கினார்கள். அவரவர்க்கு

உரியவர்கள் முன்னமே வந்திருந்து பற்பலரை வரவேற்றார்கள். என் தமையன் முதலிற் கீழ் இறங்கி எங்கள் சாமான்களை இறக்கிப் பின் என்னையும் இறக்கிவிட்டான்.இறங்கியபின் யாங்கள் மிகுந்த ஆவலோடு அப்புறமும் இப்புறமும் நோக்குகையில் நாங்கள் வந்த வண்டியின் ஒரு கோடியிலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டே அப்பெருமான் பெருமாட்டியார் இருவரும் அவர்களின் மூத்த பெண்ணும் மற்றொரு சிறுவனும் அவர்களின் வேலையாட்கள் இருவரும் நாங்களிருந்த இடத்திற்கு மலர்ந்த முகத்தோடும் புன் சிரிப்போடுங் கைகளை நீட்டிக் காட்டிக்கொண்டே எங்களிடங் கடுகவந்தார்கள். அவர்களைக் கண்டதும் என் தமையன் முற்சென்று அப்பாரசிகப் பெருமானிடஞ்சேர அவர் அவன் கையைப்பிடித்து மிக்க அன்புடன் குலுக்கி எங்கள் நலத்தைக் கேட்டபடியாய் என் அருகே வந்தார்; அவர் பக்கத்தே வந்த அம்மையார் என்னை உடனே கட்டியணைத்து முத்தமிட்டார்; அந்தப் பெருமானும் என் கையை எடுத்துத் தம் கண்களில் ஒற்றிக்கொண்டு “கோகிலா அம்மா சுகமா?” என்று கேட்டார். நாங்கள் ஒருவரையொருவர் அளவளாவி அப்போதடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை. அந்த மூத்த பெண்ணின் கன்னங்களைக் கிள்ளி முத்தம் வைத்தேன். அச்சிறு பையனை எடுத்து என் இடுப்பின்மேல் வைத்துக்கொண்டேன். இதற்குள் அவர்களுடன் வந்த ஏவலாட்கள் எங்கள் சாமான்களை யெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். அந்தப் பெருமான் அந்தப் பையனை என்னிடத்தினின்றும் வாங்கித் தாந் தூக்கிக்கொண்டு முன் நடக்க நாங்கள் எல்லாம் அவர் பின்னே மெல்ல நடந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/221&oldid=1582332" இலிருந்து மீள்விக்கப்பட்டது