உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான்

.

கோகிலாம்பாள் கடிதங்கள்

191

கொண்டு அருமையான சொற்களைப் பேச அச்சொற்களின் இனிமையையும் நுட்பத்தையும் அறிந்து பெரிதும் இன்புற்றேன்; அச்சொற்களுக்கேற்றபடியே தங்கள் அழகிய திருமுகத்தில் அமைதியாகத் தோன்றிய அசைவுகளையுங் குறிப்புகளையும் இடை டையிடையே ஒருபக்கமாய்ப் பார்த்து, “யான் இவ்வுலகத்திலன்றி வானுலகத்தின்கண் இசையினிமை நெகிழ்ந் தொழுகுங் கந்தருவரொருவரைக் கண்டு மெய்ம்மறந்திருப்ப தாகவே நினைந்தேன். யான் அச்சிறிதுநேரமும் அடைந்த இன்பநிலைமை சொல்லவும் ஏட்டிலெழுதவும் இயலாது. அப்போது தங்களை என் ஆருயிர்த் தெய்வமாகவே நினைந்து மனத்தாற்றெழுதேன். பின்னுஞ் சிறிது நேரத்தில் எங்கள் வண்டி புறப்படுவதற்கு மணி அடிக்கப் பட்டது; அதனை அடுத்து வண்டியும் நகரத் தொடங்கியது. என் தமையனும் யானுந் தங்களைத் தொழுது விடைபெற்றுக்கொண்டோம். என் நினைவு தங்கள் முகமாயிருக்கக் கூட இருந்தவர் களுக்கு அஞ்சித் தங்களைப்பாராமல் என் முகத்தை உட்புறமாகத் திருப்பிக் காண்டேன். ஆனாலுந், தங்களைத் திரும்ப எப்போது காணுவமோ என்று என் நெஞ்சந் துடிதுடித்தது.காதல் அன்பின் வாய்ப்பட்டவர்களுக்குப் பிரிவினும் மிக்கதுன்பந் தருவது வேறில்லை. தங்களைக் கண்டதில் மகிழ்ச்சியும் பிரிந்ததில் துன்பமும், இனி எப்போது காண்போம் என்பதில் ஏக்கமும், இதுவரையில் நம்மை ஒருங்கு கூட்டுதற்கு வேண்டும் உதவிகளையெல்லாம் வருவித்த நம்பெருமான் நம்மைத் திரும்பவும் விரைவில் நிலைபெறச் சேர்த்தருளுவன் என்பதில் ஆறுதலும் அடுத்தடுத்து அடைந்த படியாய்ச் சென்றேன். கதிரவன் மேற்றிசையிற் சாய்ந்த மாலைப் பொழுதில் எங்கள் வண்டி பம்பாய்க்குள் வந்தது. என் தமையன் வண்டி பம்பாய்க்குள் வந்துவிட்டது, இன்னும் இரண்டொரு நொடியில் நிலையிற்போய்ச் சேரும் நம் தாய் தந்தையரினும் மிக்க அந்தப் பாரசிகப் பெருமானும் பெருமாட்டியும் நம்மை அழைத்துச் செல்லும் பொருட்டுத் தங்குநிலைக்கு வந்திருப்பார் கள் என்று நம்புகின்றேன்' என்றான். யான் வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். நிலவுவெளிச்சம் இன்னும் வளராத நாளாகையால், அன்று வெளியே எங்கும் இருளாயிருந்தாலும், வரிசை வரிசையாக வண்டி நிலையில் தூக்கப்பட்டிருக்கும் ஆவி விளக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முழுநிலாவைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/220&oldid=1582324" இலிருந்து மீள்விக்கப்பட்டது