உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

203

செல்லவேண்டியதாயிற்று; சில இடங்களில் தாழக் குனிந்து செல்லவேண்டுவ தாயிற்று. இவ்வாறாக ஒருமணி நேரம் வரையில் நடந்து கடைசியாக ஒரு திறந்த வெளியில் வந்து சேர்ந்தோம். கூடவந்த அப்பெண் பிள்ளை என்காலைக் கடன்களை முடிக்கும்படி குறிப்பித்தாள். அப்போது காலை ஏழுமணி இருக்கும். இப்போது யான் வந்து சேர்ந்த இடத்தில் இ பெரியபெரிய ஆலமரங்களும் அரசமரங்களும் ஓங்கி

வளர்ந்திருந்தன. இந்த அகன்ற வெளியிடமும் மலைமேற்றான் அமைந்திருந்தது. இதனை அடுத்துள்ள மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் ஓங்கி வானத்தை அளாவின. இதன் ஒரு புறத்தின் ஓரமாயச் சென்று நோக்கக் கீழேயும் பெரிய பெரிய மலைத் தொடர்புகள் காணப்பட்டன. அதனால் மக்கள் உறையும் நிலத்திற்கு எவ்வளவு உயரத்தில் நான் இருக்கின்றேனென்பதே என்னால் அறியக்கூடவில்லை. மக்களுறையும் நாடு நகரங் களுக்குச் செல்லும் வழி துறைகளும் எனக்குத் தெரியவில்லை. எந்தப்பக்கம் பார்த்தாலும் மலைகளும் மலங் காடுகளு மே காணப்பட்டன. அவ்வளவு செழுமையான பசிய காடுகளையும், உயர்ந்த மலைக் குவடுகளையும், அடுக்கடுக்காய் உள்ள மலைத் தொடர்புகளையும் இதற்குமுன் யான் எங்குமே பார்த்ததில்லை. வழிதுறை தெரியாத இம்மலைத் தொடர்புகளின் ஊடே சிறைப்படுத்தப்பட்டிருக்கும் யான் திரும்ப இவ்விடத்தைவிட்டு அகன்று மக்களிருக்கும் நாடு நகரங்களை எவ்வாறு காணப் போகிறேன்! என்பதை நினைக்கவே என் கண்களினின்றும் நீர் முத்து முத்தாய்த் துளித்தது. கூடவந்த அப்பெண்பிள்ளை என்மேல் இரக்கக் குறிப்புக்காட்டி என்னை அழவேண்டா மென்று கை அசைத்தாள். அந்தப் பாரசிக கனவானையும் என் தமையனையும் பற்றிக் குறிகாட்டிக்கேட்டேன். அதற்கவள் ஏதும் விடை தெரிவியாமற் சும்மா இருந்துவிட்டாள். அதன்மே யான் அவளை ஒன்றுங்கேளாமல் அவளைவிட்டு அப்பாற் சென்றேன். அவள் ஓர் ஆலமரத்தின் நீழலிற் கற்பாறை ஒன்றன்மேல் லிருந்தாள். அவள் தன்கையிற் கொண்டுவந்த ஒரு சிறு பிரப்பம் பெட்டியைத் திறந்து யான் தலைமுழுகியபின் உடுத்துக் கொள்வதற்காகச் சிலபுதிய பட்டாடைகளை எடுத்துத் தாழ்ந்திருந்த ஒருமரக்கிளைமேல் வைத்தான். எங்களிருவரைத் தவிர வேறு ஆள் நடமாட்டம் அங்கே சிறிதுங் காணப்பட வில்லை. எனது நிலைமையை நினைந்து இடைக்கிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/232&oldid=1582424" இலிருந்து மீள்விக்கப்பட்டது