உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

❖ LDM MLDMOLILD -14❖

நெட்டுயிர்ப்பெறிந்து,

இறைவன் எவ்வழி விடுகிறான் பார்க்கலாம்' என்னும் ஒருமனத்தேர்ச்சியோடு யான் செல்ல அருகில் மேலிருந்து கீழ்விழுந்தோடும் ஒரு நீர் வீழ்ச்சியைக் கண்டேன். அந்த நீர்விழும் இடத்தில் இடுப்பளவு ஆழமுள்ள ஒருசிறு குட்டையும், அஃது அங்கிருந்து அருவியாய் இறங்கு மிடத்திற் கணைக்கால் முழங்கால் ஆழமுமே இருந்தது. அதில் இறங்கித் தலைமுழுகி எழுந்தபின் அந்தப் பெண்பிள்ளை யான் உடுத்துக் கொள்வதற்காக எடுத்துவைத்த பட்டாடைகளைக் கொண்டுவந்து

நீட்டினாள். பிறர்க்குரியவற்றை

யான்

உடுக்கலாகாது, எனக்கு அவை வேண்டாம்' என்றேன். இல்லை, உனக்குரிய பெட்டியைத்திறந்து அதிலிருந்து எடுத்த உன்னுடைய ஆடைகளே இவை' என்னுங் குறிப்புத் தோன்றக் கையை’ அசைத்தாள். அதன்மேல், அவைகளை யான் உற்றுநோக்க அவைகள் சென்னையிலிருந்து யான் கொண்டுவந்தனவாகவே காணப் பட்டன. அதன்மேல் அவற்றை உடுத்துக் கொண்டு ஈரப் புடவையை துவைத்து உலர்த்தி எடுத்துக்கொண்டேன். திரும்ப அவள் என்னை முன்வந்த வழியாகவே அழைத்துக் கொண்டு வந்து,யான் முன்னிருந்த காளிகோட்டத்தில் விட்டுப் போனாள்.

யான் வெளியே செல்லுமாறு கதவைத் திறந்துவிட்ட L அந்தப் பார்ப்பனக்கிழவர் அந்தக் காளிகோயிலைத் திறந்து அம்மையின் திருவுருவத்திற்கு உயர்ந்த நிறமும் மணமும் வாய்ந்த மலர்களணிந்து அகில் புகைத்து அம்மலைநாடுகளில் விளைந்த பலவகைத் தீவிய பழங்களும் நெய்யடிசிலும் வைத்துப் பூசனை புரிந்து சௌந்தரிய லகரியிலிருந்து வடமொழிச் சுலோகங்களைக் கூறி அம்மையை வழுத்தினார். அப்போது யான் ஆற்றாமைமிகப் பெற்று, யானும் அந்தப் பராசிக்கனவானும் என் தமையனும் அடைந்த துயரத்தை எடுத்துச் சொல்லி முறையிட்டு உளம்நைந்து அழுதபடியாய் நின்றேன். அவர் வழுத்துரைகூறி முடிந்தபின் கர்ப்பூரங் கொளுத்தி காட்டிப் பின் எனக்குத் திருநீறுங் குங்குமமுங் கொடுத்தார். அதன்பின் என்னைக்கோயிலுக்கு வெளியே வரச்செய்து, ஒரு புறத்தே ஒரு தேக்கிலையை விரித்துப் பூசைக்குவைத்த பழங்களிற் சிலவும் நெய்யடிசில் ஒரு பகுதியும் வைத்து அவற்றை உண்ணும் படி எனக்குக் குறிப்பிட்டார். அம்மைக்குப் படைத்ததாகையினால் ஒரு புளியங்கொட்டை யளவுமட்டும நெய்யடிசில் எடுத்துக் கொண்டு மிச்சத்தை உண்ணமாட்டேன்

என்றேன். அஃது ஏன்? என்று

கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/233&oldid=1582433" இலிருந்து மீள்விக்கப்பட்டது