உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

205

அசைத்துக்கேட்டார். என் கூடவந்த ஆண்பாலார் இருவரும் என்னைப் போலவே சிறை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிலைமை இன்னதென்று அறிந்தாலல்லாமல், யான் உணவு எடுக்கமாட்டேன். பட்டினிகிடந்து உயிரைத் துறப்பதற்கே தீர்மானித்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டேன். சிறிது நேரம் சும்மா இருந்து பிறகு “அம்மா, உன்னுடன் வந்தவர்களைச் சிறைப் படுத்தியிருந்தாலும், அவர்களுக்கு வேண்டிய சௌகரியங் களெல்லாஞ் செய்திருக்கின்றோம். அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். நீ இவற்றை உணவாகக் கொள்” என்று செவ்வையான தமிழில் இனிமையாகப் பேசினார். இவருக்குத் தமிழ் தெரியாதென்றும், இவர் வடநாட்டுப்

பார்ப்பனரென்றும் இதுவரையில் நினைத்துவந்த யான் இவர் நம் தாய்மொழியிற் பேசக் கேட்டவுடனே வழுக்கி விழுவோனுக்கு ஓர் ஊன்றுகோல் கிடைத்தாற்போல் ஒருவகையான ஆறுதலும் உவகையுங் கொள்ளப்பெற்றேன். இவருடைய முதுமைப் பருவமும் வடிவத்தின் அமைதியும் இனிமையான பேச்சும் இவர்பால் எனக்கு அன்புவரச் செய்தன. அதனாற் சிறிது கிளர்ச்சியும் இவரிடத்திற் பற்றும் வைத்து இவருடன் நெருங்கிய பழக்கம் உடையவள் போற் பேசலானேன்.

“பாட்டா, நீங்கள் யார்? இந்த மலைநாடும் இந்த இடமும் பம்பாய்க்கு எவ்வளவு தொலைவில் இருக்கின்றன? என்னையும் என்னுடன் வந்த மற்றிரண்டு ஆடவரையும் வழிமறித்துச் ன் சிறையாகப் பிடித்து வந்தவர்கள் யார்? அவர்களுடைய செயலையும் உங்களுடைய செயலையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இருளையும் ஒளியையும் இரும்பையும் பொன்னையும் ஒப்பாகக் காண்பது போல் இருக்கின்றதே! அப்படியிருக்க நீங்கள் அவர்களோடு தொடர்புடையவர்கள் போற் காணப்படுவது எனக்குப் பெரிதும் வியப்பாய் இருக்கின்றதே! என்னையும் மற்றிருவரையும் இங்கே கொண்டுவந்து சிறைப்படுத்தியிருப்பது எந்த நோக்கம்பற்றி? இவைகளை ஏழையேன்மீது மனமிரங்கித் தெரிவித்தருளுதல் வேண்டும்” என்று அவரை வணங்கிக்

கேட்டேன்.

66

அதற்கவர் குழந்தே, நீ களைப்பாய் இருக்கிறாய், ஆகையால் நீ முந்தி இவைகளை அருந்துவாயானால் பிறகு இவ்விவரங்களைத் உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/234&oldid=1582441" இலிருந்து மீள்விக்கப்பட்டது