உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் -14

“பாட்டா, இவ்விவரங்களைத் தெரியாமல், இந்த உணவெடுக்க என் மனஞ்சிறிதும் இசையாது. ஆதலால், அருள் கூர்ந்து இவற்றைத் தெரிவித்தல் வேண்டும். மேலும், என்னையும் மற்றிருவரையும் பிடித்து வந்தவர்கள் திரும்பவும் எங்களை எமது இருப்பிடத்திற் கொண்டுபோய்விட மனம் உடையவர்களா? இல்லையா?” என்று கெஞ்சிக்கேட்டேன்.

66

குழந்தாய், சில ஏற்பாடுகளுக்கு இணங்கினால் உன்னையும் உன் தமையனையும் அந்தப் பாரசிகக்காரரையும் அவரவர் இருப்பி டங்களுக்கு அனுப்பிவிடும் நோக்கமேயிருக்கின்றது. நல்லது, இந்த உணவைச்சாப்பிடு, பிறகு எல்லா விவரமுந் தெரிவித்துவிட்டு அப்புறஞ் செல்கின்றேன். அதைப்பற்றி நீ ஐயுறவேண்டாம்’

ங்கூறினார்.

என்று மிகுந்த அன்போடும் அருளோடு

இவரது முகத்தைப் பார்க்கும்போதும், இவர் பேசுகையில் இவரது முகத்தில் உண்டாகும் இனிய குறிப்புகளை உற்றுநோக்கும் போதும் என் அன்னையினுஞ் சிறந்த அந்தப் பாரசிகப் பெரு மாட்டியாரின் நினைவே வந்தது. அந்தப் பெருமாட்டியாரின் முக அமைப்புஞ் சாயலுங் குறிப்பும் இவர் முகத்திலும் அப்படியே காணப்பட்டன. அதனால், இவரிடத்தில் வரவர எனக்கு அன்பு மிகலாயிற்று.எங்கட்குவந்த இடர் இவரால் தீரும் என்னும் ஒரு நம்பிக்கையும் என்னுள்ளத்தில் தோன்றிற்று. ஆகவே, இவரது சொல்லைத் தட்டாமற் சிறிது உணவெடுக்க என்மனம் இப்போ திசைந்தது. அங்கு அவர் வைத்த ஒரு செம்பின்றண்ணீரால் கையை கழுவிக்கொண்டு அப்பழங்களிற் சிலவும் அந்நெய்யடிசிலிற் சிறிதும் எடுத்து அயின்றேன். அவை உள்ளபடியே மிக இனியனவாயிருந் தாலும், என் உள்ள மெல்லாம் அவர் கூறப்போகும் விவரங்களைத் தெரிவதிலும், அந்தப் பாரசிகப் பெருமானும் யானும் விடுதலைப் பெற்றுத் திரும்ப எனதிருப்பிடஞ் சேர்வோம் என்னும் நம்பிக்கையிலும் அழுந்தி நின்றன. அதனால் அத்தீஞ்சுவைப் பண்டங்களின் சுவை வேறுபாடுகளை யான் கூர்ந்தறியவில்லை. பிறகு, தீவிய மலையருவி நீரைக் குடித்துவிட்டு “வாய் பூசிக் கைகழுவுதற்கு இடம் ஏது?” எனக் கேட்டேன். அவர் அக் கோயிலின் உள்ளே என்னை அழைத்துச்சென்று அம்மையின் திருவுருவத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/235&oldid=1582449" இலிருந்து மீள்விக்கப்பட்டது