உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

207

பின்னே மேற்கூரைபோற் கவிந்து சரிந்திருக்கும் மலைப்பாறை பிளவு ஒன்றிலிருந்து குமுகுமுவென்று ன்று ஏராளமான நீர் ஓயாமற் பெருகிக் கீழ்விழும் இடத்தில் என்னைவிட்டார். அந்த நீர் விழும் இடத்தில் ஐந்தாறு அடி குறுக்களவு உள்ள வட்டமான ஒரு சிறு குட்டையிருந்தது. அதில் வந்து விழும் நீர் நிறைந்து அம்மலைப்பாறையின் கீழே மற்றொரு பிளவினூடு ஒருசிறு காலாய்ச் செல்லக்கண்டேன். அஃது எங்கே எவ்வளவு தொலைவிற் செல்கின்ற தென்பது தெரியாமையால், வாய் பூசிக் கைகழுவியபின் அந்த நீர்க்காலினைச் சுட்டிக்காட்டிப் "பாட்டா, இந்த அருவிக்கால் இந்த மலைப்பிளவினூடே எவ்வளவு தொலைவு போய் முடிகின்றது?” என்று கேட்டேன்.

அவர் ‘அம்மா, ஈசுவரனது அற்புத சிருஷ்டியால் மேலே யிருந்து விழும் இவ்வருவி நீரும், இந்தச் சிற்றருவிக்காலும் இங்கே அமைந்திருக்கின்றன. இதன் தண்ணீர் இந்த மலைப்பிளப்பின் வழியாய் எங்கே எவ்வளவு தொலைவிற் போய் எப்படி முடிகிற தென்பது இங்கே எவர்க்குந் தெரியாது. நாங்கள் இங்கே வருகிறதற்கு முன்னேதொட்டு இந்த அமைப்பு இப்படியே தான் இருக்கின்றது. விழுந்தோடும் இந்த நீர் எந்தக் காலத்திலுங் குறைகிறதில்லை. இந்தக் காளிகாதேவி கோயிலும் இந்த இடத்தில் முன்னதாகவே இருக்கின்றது” என்றார்.

இதற்குள் அவரும் யானும் அந்தக் கோயிலுக்கு வெளியே வந்து அம்மையின் திருவுருவத்திற்கு நேரேயுள்ள வேள்விக் குண்டத் தண்டை உட்கார்ந்தோம். அப்போது காலை பத்துமணியிருக்கும். மேற் கூரையாயுள்ள பாறையின் ஓர் இடுக்கிலிருந்து வெயில் வெளிச்சம் ஒரு சரிவாய்க் காணப் பட்டதேயல்லாமல், எவ்வளவு அதனூடு நோக்கினாலும் அதற்கு வெளியே மேலுள்ள வானம் ஒரு சிறிதும் புலப்பட ல்லை. அம்மையின் திருவுருவத் திற்குப் பின்னேயிருந்து குளிர்ந்த ஈரக்காற்றும் மெல்லென வந்து கொண்டேயிருந்தது. யானும் என்னைச் சேர்ந்தவர்களுங்கள் வராற் பற்றப்பட்டு வ்வளவு துன்பத்தை அடையாதபடி, யான் துயரமற்ற நிலையில் இவ்விடத்திற்கு வந்திருந்தேனானால் இதனுள்ளேயே எந்நாளும் இருந்து காலங்கழிக்க மனம்விரும்பி யிருப்பேன். யாங்கள் அங்கே இருந்தவுடனே அந்தக்கிழவனார் பின்வருமாறு பேசலானார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/236&oldid=1582458" இலிருந்து மீள்விக்கப்பட்டது