உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

208

66

❖LDMMLDMOшILD -14❖

அம்மா குழந்தே; நாங்கள் இந்த இடத்திற்கு வந்துபதினெட்டுப் பத்தொன்பது வருஷம் ஆகிறது. இங்கே வருவதற்கு முன் நாங்கள் தெற்கே தமிழ் நாட்டில் இருந்தவர்களே. வறுமையினாலும் உறவினராலும் அடைந்த துன்பம் பொறுக்க மாட்டாமல் நாங்கள் இந்த இடத்திற்கு வரநேர்ந்தது. இந்த மலை நாடு பம்பாய்க்கு இருபது முப்பது மைல் தூரத்தில் உள்ளது. இதில் வசித்துவந்தவன் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்திற்குத் தலைவன் அவன் இந்தக் கொள்ளைக் கூட்டத்தில் இல்லாமல், வேறு நல்லோர் சேர்க்கையில் இருந்திருப்பானானால் ஒரு தேசத்திற்கு அரசனாய் வரத்தக்க யோக்யதையுள்ளவன். ஏழை எளியவர்களிடத்து இரக்கம் மிகுந்து அவர்களுக்குத் தன்னால்

ஆன

ன உதவியெல்லாஞ் செய்து வந்தவன். வியாபாரம் உத்தியோகம் முதலான தொழில்களைச் செய்து பணஞ் சம்பாதிக்கிறவர்கள் போல் வெளிக்குக் காட்டி, ஏழை எளியவர்களின் பொருளைப் பகற் கொள்ளையிட்டுப் பணஞ் சேர்த்து வைத்துக்கொண்டு இரக்கமின்றிச் சுகமாய்க் காலங் கழிக்கும் பிரபுக்கள் வீட்டுகளில் நுழைந்து இரவிற் கொள்ளையிடு வதுதான் அவனுக்கு வழக்கம். இந்தப் பிரதேசம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் அவன் போகாத இடமில்லை. அவனையும் அவனைச் சேர்ந்த கூட்டத்தாரையுங் கண்டுபிடித்துச் சிறையிடுவதற்காக ராஜாங்கத்தார் எவ்வளவோ முயன்று பார்த்தும் அது முடியவில்லை. அவ்வளவு தந்திரமும் எப்படிப்பட்ட ஆபத்தையும் விலக்கிச்செல்லும் சக்தியும் அவனிடங் குடி கொண்டிருந்தன. எனக்கு ஒரே ஒரு மகன் உண்டு. அவனுக்கும் அந்தக் கள்வர் தலைவனுக்குஞ் சன்னப் பட்டணத்தில் நேசம் உண்டாயிற்று. எங்கள் பரிதாபமான நிலைமையைத் தெரிந்து என் மகனையும் என் மனைவியையும் என்னையும் இந்த இடத்திற்கு அழைத்து வந்து எங்களுக்கு ஏதொரு துன்பமுங் கவலையும் இல்லாதபடி எங்களைப் பதினைந்து வருஷங்கள் வரையிற் பாதுகாத்து வந்தான், மூன்று

வருஷங்களுக்கு முன்னே தான் அவன் காலமானான்,

காலமானாலும் எங்கள் பிழைப்பிற்கு வேண்டிய சொத்த வைத்துவிட்டுப் போனான்! அவனுடைய உதாரத்துவத்திற்கும் இரக்ககுணத்திற்கும் நாங்கள் எவ்வாறு கைம்மாறு செலுத்தப் போகின்றோம்! அது நிற்கட்டும், நி ஒரு பிராமணப்பெண்ணாமே? சிறு வயதிலேயே அமங்கலியாய்ப் போய்விட்டாயாமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/237&oldid=1582466" இலிருந்து மீள்விக்கப்பட்டது