உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

209

மறுபடியும் நீ ஒரு சூத்திரப் பையனைக் கல்யாணஞ் செய்து கொள்வதற்குத்தன் பம்பாய்க்கு வந்தாயாமே?" என்று தமது வரலாறு கூறியபின், யான் திடுக்கிடும்படியாக இந்தக் கேள்வி களைக் கேட்டார்,

அவைகளைக் கேட்ட நான் சிறிதுநேரம் மனக்கலக்கம் உற்றுப் “பாட்டா, நீங்கள் என்னைக் கேட்டவைக ளெல்லாம் உண்மைதான். யான் சிறு குழந்தையா யிருக்கும்போது என்னை நாற்பத்தைந்து வயதுள்ள ஒருவருக்கு மணம் முடித்தார்கள்; மணம் முடித்த அந்த ஆண்டிலேயே கணவனாக ஏற்படுத்தப் பட்டவர் இறந்துபோனார்; அவரை இரண்டொருமுறைதான் நான் பார்த்ததாகச் சிறிது நினைவிருக்கின்றது, மனைவியானவள் கணவனைப்பார்த்து அன்பு பாராட்டத்தக்க நிலைமையில் யான் இல்லாமையாலும், அப்போது அவர் என் தந்தையைவிடவயதில் மூத்தவராயும் வடிவத்தில் பெருத்தவராயும் விகாரமாய் இருந்தமையாலுஞ் சிறு குழந்தையா யிருந்த என் கண்களால் அவரைப்பார்த்த இரண்டொரு முறையும் அச்சங்கொண் டோடினேன். அக்காலத்தில் யான் பள்ளிக்கூடத்திற்

படித்துக்கொண்டிருந்தேன், எங்களுக்கு அடுத்த அகத்திலுள்ள ஒரு முதலிப் பையனும் என்னோடுகூடப் படித்துக்கொண் டிருந்தான், அந்தப் பையனுக்கும் எனக்குஞ் சிறுபருவம் முதலே மிகுந்த அன்பான நேசம் உண்டாயிற்று. அந்தப் பையன் வளர்ந்து ஏறக் குறைய எனக்குமேல் மூன்று நான்கு வயது மூத்தவரா யிருக்கின்றார். அவருக்கும் எனக்கம் உண்டான நேசத்தைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை என் மாமனார் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள், என் மாமனார் இரக்கமும் உயர்ந்த அறிவுங் கல்வியும் உடை யவராகையால் எனக்கும் என் தமையனுக்கும் வேண்டிய அளவு சொத்து எழுதிவைத்து, என்னை நான் காதலித்த இளைஞருக்கே மணஞ் செய்து கொடுக்கும்படி என் தமையனிடமும், என் தமையனோடு இந்த மலைகளினிடையே சிறையிடப் பட்டிருக்கும் பாரசிகக் கனவானிடமுஞ் சொல்லி இறந்துபோனார்!” என்று எல்லாம் எடுத்து விரிவாகச் சொன்னேன்.

"குழந்தாய் உன்னுடைய நிலைமையைத் தெரிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். நம்மவர்கள் பிழையான ஏற்பாடுகளைச் செய்து விட்டுப் பிறகு தாமும் அவ்வேற்பாட்டில் அகப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/238&oldid=1582474" இலிருந்து மீள்விக்கப்பட்டது