உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் -14

வர்களுஞ் சொல்லவொண்ணாத் துன்பம் உறுகிறார்கள். பார்ப்பாரச் சாதியிற் பிறந்த நம்மவர்களுக்குப் பொதுவாக இரக்கமும் அன்பும் பின்வருவதை முன் ஆராயத் தக்க அறிவும் இல்லை. அந்த நேரத்தில் தமக்கு எது லாபமோ அதை முன்பின் ஆராயாமற் செய்துவிடுவார்கள். தமது லாபத்திற்காகப் பிறரை எவ்வளவு துன்பத்திற்கும் உள்ளாக்குவார்கள்! அறக் கொடியர்கள்! நானும் என் குடும்பத்தாரும் நம்மவராற் பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை! நீ புனர்விவாகஞ் செய்துகொள்வதைப் பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. வேத உபநிஷத காலங்களிற் எத்தனையோ பெயர் புனர்விவாகஞ் செய்திருக்கிறார்கள். அது சான்றோரால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றது. ஆனாலும், நீ நம்முடைய சாதியைவிட்டுத் தாழ்ந்த சூத்திர சாதியில் ஒருவனைக் கல்யாணஞ் செய்வதுதான் என் மனத்திற்குப் பிடிக்கவில்லை.” என்றார்.

பெண்பாலாரில்

நீ

'ஐயோ! இவர் சாதி வேற்றுமை பார்க்கின்றாரே! இவருடைய தன்மைகளெல்லாம் உயர்ந்தவைகளா யிருந்தும், இவருக்குச் சாதிப்பற்று மட்டும் விலகவில்லையே! இவருக்கு எப்படி விடை சொல்வது! நான் சொல்லும் விடையால் இவர் என் மேல் வருத்தங் கொண்டு என்னைப் பகைப்பாரானால், யானும் என்னைச் சேர்ந்தவர்களும் இவ் விடத்தைவிட்டுத் தப்பிச் செல்வதற்கு ஒருசிறு வழியும் இல்லாமற் போமே! என் செய்வேன் தெய்வமே!" என்று சிறிதுநேரம் அச்சமும் மனக் கலக்கமுங் கொண்டு வாய் பேசாதிருந்தேன்.

66

எனது முகவாட்டத்தைப்பார்த்து அவர் திரும்பவுங் குழந்தாய், நான் சொன்னதற்காக நீ மனவருத்தப்படாதே. உன் மனசிலிருப்பதைத் தைரியமாய்ச் சொல்.” என்றார்.

நீ

என் மனத்திலுள்ளதைத்

“பாட்டா. திறந்து சொல்வதற்காகத் தாங்கள் வருந்தாதிருக்கும்படி தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். நானோ ஏழைச் சிறுமி, ஒன்றும் அறியாதவள், யான் சொல்வது பிழையா யிருந்தாலும் அதனைத் தாங்கள் பொறுத்தருளல் வேண்டும். தாங்கள் சொல்வதிலிருந்தே நம் பார்ப்பனக் குலத்திலுள்ளவர்களிற் பெரும்பாலார் மிகக் கொடியரும், இரக்கமும் அன்பும் ஆராய்ச்சி அறிவும் இல்லாதவருந், தமது நலத்தையே பார்ப்பவரும் ஆவரென்பது நன்கு புலப்படுகின்றது. இவ்வளவு இழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/239&oldid=1582483" இலிருந்து மீள்விக்கப்பட்டது