உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

211

இயல்புகள் உள்ளவர்களை மேற்குலத்தவ ரென்றும், மெல்லிய தன்மையும் இரக்கமும் அன்பும் உதவியும் ஆராய்ச்சியறிவும் பொதுநல நோக்கமும் உடைய மற்றையோரைக் கீழ்க்குலத்த ரென்றும் நாம் சொல்லிக்கொள்வது எனக்கு விளங்கவில்லை. ஆதலால், மற்றைக் குலத்தில் உயர்ந்த இயல்புகள் எல்லாம் அமைந்த ஒருவரைச், சிறுபருவம் முதலே என்னால் அன்புபாராட்டப்பட்ட ஓர் இளைஞரை நான் மணந்து காள்வதில் ஏதுங் குற்றம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லையே.” என்றேன்.

66

அம்மா, நீ சொல்வது உண்மையாய் இருந்தாலும், பார்ப்பாரக்குலம் என்னும் பெயர் வாய்ந்தவர்கள் அந்தக் குலத்தினுள்ளேயே மணஞ்செய்து கொள்வது வழக்கமாய் வந்துவிட்டது, ஆயினும், நான் ஒன்று சொல்லுகிறேன். எனக்கு ஒரே ரே ஒரு மகன் இருக்கின்றான். அவன் அழகிலும் நல்ல குணத்திலுஞ் சிறந்தவன். அவனுக்கு இன்னுங் கல்யாணம் ஆகவில்லை. அவன் பல வருஷங்களாய்த் தனக்கு இசைந்த ஒரு பெண்ணைத் தேடி வருகின்றான். உன்னைப்பற்றிக் கேள்விப் பட்டது முதல் அவன் உன்னையே மணஞ் செய்துகொள்ள வேண்டுமென்னும் விருப்பங் கொண்டு, அதற்கேற்ற சமயம் பார்த்திருந்தான்.நீ பம்பாய்க்கு வருவதைக் கேள்விப்பட்டு இங்கே உன்னைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளெல்லாம் முன்னமே செய்திருந்தான். மற்று நீ இங்கே கொண்டு வரப்பட்ட வகைகள் எல்லாம் நீயே அறிந்திருக்கின்றாய்.” என்றார்.

66

ஆம், நன்றாய் அறிவேன். கத்தியுந் துப்பாக்கியுங்கொண்டு காலைக்கஞ்சாத வன்னெஞ்சக் கள்வர்களால் யானும் என்னைச் சேர்ந்தவர்களும் வலிந்து கொண்டுவரப்பட்டோம். மெல்லிய நெஞ்சமுடைய ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்கு இது தானா வழி உங்கள் மகன் கொடியதொரு கள்வர் கூட்டத்தைச் சேர்ந்தவராக வன்றோ காணப்படுகின்றார்! இப்படிப் பட்ட கொடுஞ் செயலுங் கொடுந் தன்மையும் உடைய ஒருவரை ஏழைப் பண்ணாகிய நான் மணந்துகொள்வது எப்படி? மணம் என்பது தெய்வத்தன்மை வாய்ந்ததன்றோ? அதனைச் செய்து கொண்டு கணவனும் மனைவியுமாய் வாழ விரும்புவோர் ஒருவர் உள்ளத்தை மற்றவர் அறிந்து உயர்ந்த காதல் அன்பால் இருவர் உயிரும் ஓர் உயிராய்ப் பிணைக்கப்பட்ட பின்னன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/240&oldid=1582490" இலிருந்து மீள்விக்கப்பட்டது