உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் -14

மணஞ்செய்து வாழ முயல வேண்டும், மேலும் என்னை மணங்கொள்ள விரும்பினவர் என்னை மட்டுமன்றோ இங்கே ன கொண்டு வந்திருக்கவேண்டும்? என் தமையனையும் அவனுட னிருந்த வேறொரு பாரசிக கனவானையும் ஏன் இங்கே கொண்டு வந்து சிறையில் அடைக்க வேண்டும்? வர்களுடை செய்கைகளை நன்றாய் ஆராய்ந்து பார்க்கையில், முதலில் எங்களைப் பிடித்து வந்தபோது ஒரு நோக்கமும் ஏழைச் சிறுமியாகிய என்னைப் பார்த்த பிறகு கூட ஒரு நோக்கமுங் கொண்டவர்களாகவன்றோ காணப்படுகின்றனர்? ஏதொரு வலிவுமில்லாத ஒரு பேதைப் பெண் தமது கையிற் சிக்கிக் காண்டமையால் அவளைத் தாம் விரும்பியபடி யெல்லாஞ் செய்துகொள்ளலா மென்னுந் தீய எண்ணமே அவர் மனத்திற் குடிகொண் டிருக்கின்றதென அறிகின்றேன். தாதா, உங்களுடைய அமைதியான வடிவத்தையும் இனிய குணத்தையும் உயர்ந்த அறிவையும் நான் எண்ணிப் பார்க்கப்பார்க்க இப்படிப்பட் தங்கட்குக் கொடிய கள்வர் ஒருவர் மகனாய்ப் பிறந்ததும், அவருடைய நோக்கப்படி யெல்லாந் தாங்கள் இசைந்து நடப்பதும் எனக்குப் பெரியதொரு வியப்பைத் தருகின்றன. யான் வலிவற்ற ஏழைப்பெண்ணாய் இப்போது கொடிய கள்வர்கையிற் சிக்கிக் கொண்டாலும், அவர்கள் எண்ணப்படி நடப்பேன் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். என்னுடைய உயிரும் உடலும் நினைவும் அன்பும் எல்லாம் ஒருவருக்கு முன்னமே கொடுக்கப் பட்டன; இனித் திரும்ப அவற்றை மற்றொருவர்க்குக் கொடுக்கப் போவது கனவிலும் இல்லை. தங்கள் மகனுடைய தீய நோக்கங்களுக்கு இசையாமல் தாங்கள் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் இக் கொடுஞ் சிறையினின்றும் விடுவித்து எங்களை எங்கள் இருப்பிடம் போக விடுவீர்களானால், தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் புண்ணியமாகும். ஏழையேனும் என்னைச் சேர்ந்தவர்களுந் தாங்கள் செய்த நன்றியை எழுமையும் மறவோம்!" என்று வற்புறுத்தியும் அஞ்சாமலும் மன்றாடியுஞ் சொன்னேன்.

க்

யான் சொல்லியவைகளைக் கேட்டுச் சிறிதுநேரம் ஆழ்ந்த நினைவிலிருந்த அப் பார்ப்பனப் பெரியவர் பிறகு "குழந்தாய், உன்னுடைய நுண்ணறிவை நான் மிகுதியும் பாராட்டுகின்றேன். நான் முன்னமே தெரிவித்தபடி எங்களுடைய வறுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/241&oldid=1582494" இலிருந்து மீள்விக்கப்பட்டது