உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

213

உறவினர்களாற் பட்ட துன்பமுமே நாங்கள் கள்வர்களுடன் நேசங்

கொள்வதற்குக் காரணமாய் இருந்தன. என் மகன் நீ

சொல்லுகிறபடி அவ்வளவு கெட்டவன் அல்லன். ஏனென்றால், எங்களை இங்கே கொண்டு வந்த கள்வர் தலைவன் கெட்டவனுங் கொலைகாரனும் அல்லன். தன்னுயிர்க்கு ஆபத்து வருவதா யிருந்தால் மட்டுந் தனது துப்பாக்கியையுங் கத்தியையும் உபயோகிப்பான். பகற்கொள்ளைக் காரரான உத்தியோகஸ் தர்களும் வியாபாரிகளுஞ் சேர்த்துவைக்கும் பணத்தைக்கவர்ந்து ஏழை எளியவர்களுக்குப் பயன்படுத்துங் கள்வனே தான் என்று அவன் தன்னைப் பற்றி என்னிடம் பலகாற் சொல்லியிருப்பதோடு, அவன் ஒவ்வொரு நகரங்களிற் போய் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு சிலநாட்களோ சில மாதங்களோ தங்கியிருந்து அங்கங்குள்ள கல்விச்சாலைகளுக்கும் அறச்சாலை களுக்கும் மடங்களுக்கும் ஏராளமாகப் பொருளுதவி செய்து தான் சொல்லியதைச் செய்கையிலுங் காட்டி வந்திருக்கின்றான். அவன் தான் செய்யுங் களவுத்தொழிலால் எவர்க்கும் உயிர்ச்தேம் உண்டாகாமல் அதனை நடத்தும் பொருட்டுப் பல மயக்கு வித்தைகள் கற்றிருந்தான், அவனுக்கு அற்புதமான பல பச்சிலை மருந்துகளுந்தெரியும். இந்த மலைநாட்டிலுள்ளசில பச்சிலை களின் சக்தியை என்னென்பேன்! ஒரு பச்சிலையை ஒருவர் மூக்கிற் பிடித்தால் அவர் நெடுநேரம் உணர்விழந்து கிடப்பர். ஒருகால் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஒருவரைச் சுட்டாலும், அல்லதவர் கால்கையை வெட்டினாலுஞ் சில பச்சிலைச்சாறுகளால் அவருடைய காயங்களை இரண்டொரு நாட்களுள் ஆற்றி அவர்களிருப்பிடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்து விடுவான். பிரபுக்கள் சிலரிடம் நேசம் புரிபவன்போற் போய்ச் சேர்ந்து அவர்களை உணர்வோடுகூடிய ஒருவகையான தூக்கத்திற் போகச்செய்து சய்து தான் வேண்டிய பொருளை அவர்களே தரப்பெற்று வருவான். யாரேனும் அவனைப் பிடிக்க வந்தால் அவர்களைத் திரும்பி உறுத்துப் பார்ப்பானானால் அவர்கள் உடனே மயங்கிக் கீழ்விழுந்து விடுவார்கள். பணக்காரரில் இவனைப் பற்றிக் கேள்விப் பட்டுத் திகில் கொள்ளாதவர்கள் இல்லை. துரைத்தன அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும் வனைப் பிடிக்கமாட்டாமல் வருந்தினர். இப்படிப்பட்ட யோக சக்திகள் உள்ள அவன் இந்தத் திருட்டுத் தொழிலை கைக்கொண்டு நடக்கலானது எனக்கே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/242&oldid=1582503" இலிருந்து மீள்விக்கப்பட்டது