உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் -14

பெரு வியப்பாகத்தானிருந்தது. இப்படிப்பட்டவனிடம் பழகி வந்தமையாலும், ஏற்கனவே என் மகன் நல்ல தன்மைகள் பொருந்தினவனாய் இருந்தமையாலும் இவனும் அவனுக்குத் தெரிந்த வித்தைகளை யெல்லாந் தெரிந்துகொண்டு அவனைப் போலவே நடந்து வருகின்றான். என் மகனை இந்தத் தொழிலி லிருந்து விடுவித்து எங்கேனும் ஓரிடத்திற் போயிருந்து யோக்யதையாகக் காலங் கழிக்க முயன்றுவந்தேன், பயன்ப வில்லை. ஒரு தொழிலிற் பழகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அருமையாகவே யிருக்கின்றது. ஆனாலும், நேற்று உன்னைப் பார்த்ததுமுதல் அவனுக்கு மனம் வேறுவழியில் திரும்பியிருக் கின்றது.உன்னைக் கல்யாணஞ் செய்து கொண்டால் தான் இந்தக் களவுத் தொழிலையுங் கள்வர் கூட்டத்தையும் அறவே தொலைத்து விட்டு, நாடுநகரங்களுள் எங்கேனும் போயிருந்து யோக்யதையா யிருந்து உயிர்வாழலாம் என்று தன் உள்ளத்தைத் திறந்து உண்மையாய் உறுதி சொன்னான். முதலில் உங்களைக் கொண்டு வந்த நோக்கம் வேறுதான். உன் மாமனாரால் உனக்கு நாற்பதினாயிர ரூபா சொத்தும், உன் தமையனுக்கு நாற்பதினாயிர ரூபா சொத்துங் கிடைத்தனவாம். அந்தச் சொத்து முழுமையும் உங்களிடமிருந்து கவர்ந்து தான் பாதியும், தன்னை இதில் ஏவிய வெளியார் மூன்று பேர்க்குப் பாதியும் பகுத்துக் கொள்வதாக என் மகன் எண்ணியிருந்தான்-” என்று சொல்கையில்,

யான், “உங்களை இவ்வாறு செய்யும்படி ஏவியவர்கள் யார்?” என்று மிகவும் பரபரப்போடு வினவினேன்.

66

அவர்கள் இன்னாரென்பது எனக்குந் தெரியாது, என் மகனுக்கும் அவர்களைப் பற்றிய விவரம் ஒன்றுந் தெரியாது. சொத்தை உங்களிடமிருந்து கவர்ந்துகொள்ளுதற்கு வேண்டிய அளவுமட்டும் என் மகனும் அவர்களுங் கலந்து பேசிக்கொண்ட தாகத் தெரிகின்றேன். நீ என் மகனைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதானால் உங்கள் சொத்துகளை நீங்களே வைத்துக் கொள்ளவும், நாம் எல்லாம் நேசமாகப் பம்பாய் நகரத்திலேயே போயிருந்து உயிர்வாழவும் அவன் உண்மையாகவே விரும்பியிருக் கின்றான். ஆகையால், நாங்கள் உன்னாலேயே நல்வழிக்குத் திரும்பி மிச்சமுள்ள வாழ்நாளையும் புண்ணியமார்க்கத்தில் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. ஆகையால், தயவுபண்ணி நீ உன் மனசைத் திருப்பி என்மகனை விவாகம் செய்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/243&oldid=1582511" இலிருந்து மீள்விக்கப்பட்டது