உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

215

இசைந்தால், எங்களை யெல்லாம் நல்வழியில் திருப்பிய பெரும் புண்ணியம் உண்டாகும்” என்று உருக்கத்தோடு கூறினார்.

கெட்ட எண்ணமில்லாமல் நல்வழியில் தன் மகனைத் திருப்புதற்கு விரும்பி உருக்கத்தோடு இவர் உண்மையாகப் பேசினமையால் இவரிடத்தில் எனக்குச் சினம் உண்டாகவில்லை. இவர் கொண்ட எண்ணத்தை எப்படி மாற்றுவதென்றும் எனக்கொன்றும் புலப்படவில்லை. ஆகையாற் சிறிதுநேரம் யான் பலவாறெல்லாம் எண்ணிகொண்டிருந்து பிறகு “தாதா, என் உயிரையும் நினைவையும் அன்பையுமெல்லாம் ஒருவற்குக் கொடுத்து விட்டபிறகு இனி வேறொருவரை மணப்பதற்கு என் உள்ளம் அணுவளவும் இசையாது. உள்ளம் எவரை நாடியதோ அவர் பால் அன்பு நிலைபெறுதலே மாதரின் கற்பொழுக்க மாகும். இதற்கு மாறாகத் தனக்கு இசையாத ஒருவரை மணப்பது கற்பொழுக்கத்திற்கு முற்றும் மாறாகும். ஆதலால், யான் தங்கள் மகனையாவது அன்றி வேறொர் ஆடவரையாவது மணக்கக் கனவிலும் நினையேன். என்றாலும், என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் இங்கிருந்து விடுதலைசெய்து எங்களிருப் பிடத்திற்கு அனுப்பி விடுவீர் களானால், உங்கள் மகனுக்குத் தக்க ஓர் அழகிய பெண்ணைத்தேடி மணம்புரிய முயல்வேன். வேண்டுமானால் என் பங்குக்குவந்த சொத்துமுழுமையும் உங்களுக்கு எழுதிக்கொடுத்துவிடுகிறேன். எங்களுக்கு ஏதுந் தீங்குசெய்யாமல் எங்களை விடுவித்தருளல் வேண்டு”மென்று பணிந்துகேட்டேன்.

66

‘அம்மா, நீ சொல்வது என் மனசிற்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒருபெண் தான் விரும்பிய கணவனை விவாகஞ் செய்துகொள்வது இலட்சத்தில் ஒன்றுகூட இராதென்று நினைக்கின்றேன். ஒரு சாதிக்குள், ஒரே குலத்திற்குள், கோத்திரப் பொருத்தம் பார்த்து விவாகம் முடிக்கவேண்டியதாயிருப்பதால் ஒரு பெண் தான் விரும்பிய கணவனை விவாகஞ் செய்து கொள்வது முடியாது. ஆதலால், அவள் தன் சுற்றத்தார் பார்த்து நியமிக்கும் ஒருவனையே கல்யாணஞ் செய்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றான்.” என்றார்.

“பாட்டா, சாதிக் கட்டுபாடுங் குலங் கோத்திரம் முதலான பலவகைக் கட்டுப்பாடும் வைத்துக்கொண்டு ஏழைப்பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறானவர்களுடன் பிணைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/244&oldid=1582519" இலிருந்து மீள்விக்கப்பட்டது