உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV

நூலுரை

காதல் கதை இது. கோகிலாம்பாளே தன் காதலன் கடிதத்தை உள்வாங்கி, தான்மறுமொழி எழுதுவது போல் எழுதப்பட்ட புனைகதை.

சாதி ஒழிப்பில் உருக் கொண்டது எனின் சாலும். இதன் முதற்பதிப்பு 1921இல் "பல்லாவரம் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை யடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக் கழக நிலையத்தின் கண் உள்ள டி.எம். அச்சக் கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது என்னும் குறிப்புளது.

இந்நூற் கதையின்கண் வருந் தலைவி கோகிலாம்பாளும் அவளுக்கு முதல் உறவினரும் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் களாயிருத்தலாலும், அவள் தந்தையாகிய பாரசிகர் நாட்டவராதலாலும் அவர்களுடைய உரையாட்டுகளில் இடை

வட

டையே வடசொற்களும் சில கொச்சைச் சொற்களும் கலந்திருத்தல் காணலாம் என நூல் நடைபற்றி முகவுரையில் கூறுகிறார்.

“உலக வழக்கிற்கு மாறுபடாமல் அதன் நிகழ்ச்சிகளை அங்குள்ளவாறே எடுத்து அவற்றை விழுமியவாக்கித் தொடுத்துக் கதைகளும் நாடகங்களும் இயற்றுதலே புனைந்துரை வழக்கில் வைத்து அவைதம்மை இயற்றும் நல்லிசைப் புலவனுக்கு இன்றி யமையாத கடமையாம். உலக இயற்கையிலும் மக்கள் இயற்கை யிலும் ஒரு சிறிதும் காணப்படாதவைகளைத் தானே படைத்து ஒரு கதை நூல் வகுத்தல் நல்லிசைப் புலமை ஆகாது”. எனப் புனை கதை அமைவின் இலக்கணம் படைக்கிறார் அடிகள். விரிவான முன்னுரையுடையது இது.

கடித வழியாகக் கதைப் பின்னலிலும் ஒருவர் (காதலி) வழியாகவே இருவர் கடிதமும் காட்டிக் கதைப் புனைவு செய்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/26&oldid=1581984" இலிருந்து மீள்விக்கப்பட்டது