உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

மறைமலையம் - 14 *

நல்ல உத்தியாம். கதை முடிவில் பின்னுரையாக, கோகிலாம் பாளின் காதற்கணவன் தெய்வ நாயகமே 'மறைமலையடிகட்கு எழுதப்பட்டது என ஒரு கடிதம் கொண்டு’ நூல் நிறைகிறது.

என் மனைவி கோகிலாம்பாளும் யானும் அவள்தன் பெற்றோர்களால் ஓர் ஆண்டிற்குமுன் பம்பாய் நகரத்தில் மனம் உவந்து மணம் செய்விக்கப்பட்டு, அருமை பெருமையிற் சிறந்த அவள்தன் குடும்பத்தினரோடு சேர்ந்தே இனிது வாழ்ந்து வருகின்றோம் என்று எழுதும் நல்லதோர் உத்தியால் கடிதக் கதையை நிறைவு செய்கிறார்.

அடிகளார் கூறும் அறக் கூறுகள் கதையில் இடை இடையே மின்னி மிளிர்கின்றன. மு.வ. அவர்களின் புனைகதைகளின் முன்னோட்டம் போல்வது இது.

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/27&oldid=1581985" இலிருந்து மீள்விக்கப்பட்டது