உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் -14

ஒரு செப்புக்குடம் அக்கோயிலின் ஒருமூலையில் இருந்தது. அதனை எடுத்துக்கொண்டுவந்து அம்மையின் எதிரே வைத்து அன்னாய், எழைக்கிரங்கும் ஏந்திழாய், இங்குள்ள இக்கொடிய கள்வர்கையில் நின்றும் பேதைச் சிறுமியாகிய யான் தப்பிப் போவதற்கு நீ திருவுளம் இரங்கல்வேண்டும். உனது திருக்குடமாகிய இதனை அடியேற்குத் தந்தருளல் வேண்டும்’ என்று சொல்லிக் குறையிரந்தேன். அப்போது தலைக்குமேல் உள்ள ஒருபல்லி இனிதாக முற்கந்தெறித்தது. அதனை அம்மையின் விடையாகத் துணிந்து, அவள் வடிவத்தினை வலம்வந்துவணங்கி அக் குடத்தினை எடுத்துக்கொண்டு பின்னேயுள்ள குட்டத்தின்கரையில் சென்று எனது ஆடையில் ஒரு சிறு துண்டைக் கிழித்து அக்குடத்தின் கழுத்தைச்சுற்றி அத் துணியின் நடுவில் முடிபோட்டேன். அதன்பின் எனது ஆடையை என்னுடம்பெங்கும் நன்றாய் இறுகச்சுற்றிக் கட்டிக்கொண்டு, அக்குடத்தைக் கவிழ்த்து அதன்வாயை எனது பிடரியின்கீழ் முதுகின்மேல் வைத்து அதன் கழுத்திற்கட்டிய துண்டின் இருபுறத்தையும் அக்குளின் கீழ்விட்டு என்மார்பின்மேல் இழுத்துப் பட்டையாய் வைத்து முடிந்தேன். இவ்வாறு செய்தபின் ‘இனி எவ்வாறாயினும் அம்மையின் திருவுளத்திற்கே ஒப்பிதம்' என்று நினைத்துத் துணிவோடும் அக் குட்டத்தினுள் இறங்கினேன். இறங்கி அதன் நடுவிற்செல்ல முன்போலவே தண்ணீர் கழுத்தண்டை வந்தது. இப்போது நான் சிறிதும் அஞ்சவில்லை. இன்னும் முன்நடந்து, அக் குட்டம் நிரம்பித்

தண்ணீர் குறுகலாய் மலைப்பிளவி னூடு செல்லும்

ம்

வாயிலண்டை வந்தேன். இப்போ தென்கால்கள் நிலத்திற் படவில்லை.என் முதுகின்மேற் கட்டியகுடம் என்னைத் தூக்கிக் கொண்டது. அவ்விடத்தின ஆழம் எனக்கு நிலைக்கவில்லை யாதலால், அந் நீரோட்டத்தில் யான் இப்போது என் விருப்பப்படி நடந்து செல்லக்கூடாமல் அதனால் விரைந்து இழுக்கப்பட்டேன். என் முதுகிற் கட்டியகுடம் என்னை மிதக்கவைத்தபடியா யிருக்க, யான் அந் நீரோட்டஞ் சென்றவழியே விரைந்து இழுக்கப்பட்டுச் சென்றேன். கீழ் நிலம் என் கால்களிற் சிறிதுந் தட்டுப்படாமையால் யான் செல்லும் இந் நீரோட்டம் மிகவும் ஆழமானதென்று கண்டேன். தலைக்குமேல் இரண்டு மூன்றடி உயரத்திலும் மலைப்பாறை, யான் செல்லும் நீரோட்டத்தின் இரண்டுபக்கத்திலும் மலை, சில

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/261&oldid=1582545" இலிருந்து மீள்விக்கப்பட்டது