உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

231

ளிருப்பிடம் அனுப்பி விட வேண்டுமென்று என் மகனிடம் வற்புறுத்தியும் அவன் அதற்கு இணங்குகிற வழியாயில்லை. உன்னை மணஞ் செய்து கொள்ளக் கூடாவிட்டாலும் உன்னை வைத்துப் பார்த்துக் கொண்டாவது இருக்க வேண்டுமென்னும் நினைவுடையவனாய் இருக்கின்றான். உன்னுடைய நினைவே அவனுக்குப் பித்தாக ஏறிவிட்டது! உன்னுடன் வந்தவர்களையாவது டுதலைசெய்யும்படி நான் கேட்டதற்கு முதலில் இணங்கிப் போனவன், அடுத்தநாளில் வந்து அதற்கும் இணங்காமற் பேசினான்.யாரோ இரண்டுபேர் உளவாளிகளாய் வந்திருப்பவர் கள் பேச்சைக் கேட்டு அவர்களை விடுவிப்பதற்கு இணங்காமல் மனங் கலைக்கப் பட்டிருக்கின்றான்! என் செய்யலாம்! ஈது எப்படி முடியுமோ! அருமைச் சிறு குழந்தை யாகிய உனது துயரைக் கண்டு என்னாற் பொறுக்க முடியவில்லை! ஆதலால்,என்னால்ஆக வேண்டுவது ஏதாயிருந்தாலும் யான் அதனைச் செய்யத் தடையில்லை, என்னால் ஆகாததற்கு யான் என்செய்வேன்!” என்று மனம்நைந்து கூறினார்.

இவருடைய சொற்களைக் கேட்டபின் இவ்விடத்தைவிட்டு அகலலாம் என்று யான் கொண்டிருந்த ஒரு சிறு நம்பிக்கையும் று என்னைவிட்டகன்றது. இனி இவ்விடத்தைவிட்டு நீங்குவதற்குப் பெருமுயற்சி செய்யவேண்டுமென்றும், அம் முயற்சி கை கூடாதாயின் உயிரைத் துறப்பதே செயற்பாலதென்றும் முடிவு கட்டினேன். ஐந்தாம்நாட் காலையில் அப் பெரியவர் மேற்கூறியவாறு என்னுடன் பேசிவிட்டுத் தம் இல்லம் நோக்கிச் சென்றபின் யான் அம்மையைத் தொழுது காண்டு பின்புறத்தேயுள்ள அருவிநீர் விழுங் குட்டத்தில் இறங்கினேன். முதலில் அஃது இடுப்பளவு ஆழம் உள்ளதாயிருந்தது. பின்னர் அதன் நடுவிற் செல்லத் தண்ணீர் என் கழுத்தளவுக்குவந்தது. அதனால் துணுக்குற்றுத் திரும்பிக் கரை ஏறினேன். ஏறிச் சிறிதுநேரம் அக் கரையின் மீது ஆழ்ந்த நினைவோடும் மனக் கவலையோடும் இருந்தேன். இப்போது என் உள்ளத்தில் ஒன்று தட்டுப்பட்டது. ‘ஆழம் மிகுதியாயுள்ள இடங்களில் அமிழ்ந்திப் போகாத படியான் மிதப்பதற்கு ஏதுசெய்யலாமென்று எண்ணிப் பார்க்க ஒரு வெறுங் குடத்தை முதுகில் கட்டிக்கொண்டால் நீரில் அமிழாமல் மிதக்கலாம்' என்று ஒருநினைவு பிறந்தது. அதற்காக அம்மையைத் தொழுதேன். அம்மைக்குத் தண்ணீர் முகந்து விடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/260&oldid=1582544" இலிருந்து மீள்விக்கப்பட்டது