உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் -14

அவர் மக்களும் எந்த நிலைமையில் இருக்கிறார்களோ என்பதை நினைக்க என் உள்ளம் அனலிற்பட்ட மெழுகாய் உருகிப் போயிற்று. பம்பாய்போய்ச்சேர்ந்தபின் தெரிவிப்பதாகத் தங்களிடம் நேரே சொல்லி வந்தமையின், யாங்கள் பட்ட அல்லல்களைக் குறித்துப் பாரசிக அம்மையார் தங்கட்கு அறிவித்தனரோ இல்லையோ எனவும், தங்கட்கு இவைகள் அறிவிக்கப்படாமலிருந்தால் தாங்கள் எங்களைப்பற்றி எவ்வாறு நினைந்து எங்ஙனம் வருந்துவீர்களோ எனவும் ஒன்றன்பின் னொன்றாக நினைந்து பெரும் புயலில் அகப்பட்டு நடுக்கடலில் வழிமாறித் தத்தளிக்கும் மீகாமனைப்போற் கலங்கினேன்! இவ்வாறாக அன்றிரவு முழுதும் உறக்கமின்றி நிலத்தே கிடந்து புரண்டேன். விடியற் காலையில் முன்நாளிற் போலவே வந்த பெண்பிள்ளையோ டுடன் சென்று காலைக் கட கடன்களை முடித்து வந்தேன். அந்தப் பெரியவரும் பெரியம்மையுந் தம் இல்லத்திற்குச் சென்றார்கள்; யான் வெளியே போய்த் திரும்புதற்குள் அப்பெரியவர் மட்டும் பூசைக்கு வேண்டும் பொருள்களோடு அங்கு வந்திருந்து கதவைத் திறந்து வைத்திருந்தார். பிறகு பூசைநடைபெற்றது.யான் சிறிது உணவு கொண்டேன். அதன்பின் அப் பெரியவர் தம தில்லத்திற்குப் போகப், பிற்பகலில் அவர்தம் மகன் என்னிடம் வந்து முன்னாளிற்போலவே தன்னை மணஞ் செய்துகொள்ளும்படி தாழ்மையோடு வேண்டினான்.யான் அதனை முற்றும் மறுக்கவே பின்னும் வாட்டத்தோடு போயினான். மாலையிற் பெரியவரும் பெரியம்மையும் எனக்குத் துணையாகவந்து படுத்துக் கொண்டார்கள். இப்படியாகவே நாலைந்துநாட்கள் சென்றன. நாட் செல்லச் செல்ல என் மனத்துயரமும் ஆறாய்ப் பெருகி வரலாயிற்று. 'இச் சிறையினின்று என்னையும் என்னவர்களையும் விடுவித்துக்கொள்ள வழிகாணாமற் கள்வர்கையில் உணவுவாங்கி யுண்டு காலங்கழிப்பதோ! இதனைவிட்டுப் போவதென்று அல்லது உயிரைத் துறப்பதொன்று' என உறுதிசெய்தேனாய், ஐந்தாம் நாட் காலையில் அப் பெரியவரை நோக்கிப் “பாட்டா, என்னை விடுதலை செய்விக்க வழியில்லையாயின் அதனை முடிவாகத் தெரிவித்து விடுங்கள்!” என்று கேட்டேன்.

அதற்கவர் உண்மையான மனத்துயரத்தோடும் “அருமைக் குழந்தாய், யானும் என் அகத்துக்காரியுங் கடந்த நாலு நாட்களாய்ப் பேசி உன்னையும் உன்னவர்களையும் அவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/259&oldid=1582543" இலிருந்து மீள்விக்கப்பட்டது