உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

❖LDMMLDMOшILD -14❖

நின்றது; அதில் யான் இப்போது சிறிது நடந்துசெல்லவும் முயன்றேன். பின்னும் அரைமணி நேரமாயிற்று; இப்போது வெளிச்சம் நன்றாய்த் தோன்றியது. இவ்வருவிக்கால் இம்மலைப்பிளவை விட்டுப் புறம்போகும் மலைவாய் என் எதிரே தோன்றிற்று.இப்போது அருவிநீர் என் இடுப்பளவுதான் இருந்தது. திரண்டகற்களுஞ் சிறுசிறு பாறைகளும் அடியிற் கிடந்தமையால் யான் அவற்றின் மேல் நடந்து செல்வது வருத்தமாகவே யிருந்தது. மேலுந், தண்ணீர் விசையாக இழுத்துச் சென்றமையால், அவ்விசைக்குத் தக்கபடியான் அத்திரட்சிக் கற்களின்மேல் நடந்து செல்வது இயலாதாயிற்று.அதனால்,யான் மறுபடியும் எனது குடத்தின் உதவியால் மிதந்த படியாகவே சென்றேன். ஆயினுங், கீழ்நிலங் காலுக்குத் தென்படுகிறதா என்பதை இடைக் கிடையே காலால் தடவிப் பார்த்துக் கொண்டே சென்றேன். இப்போது மலைவாயிலண்டைவந்தேன். என் தலைக்குமேல் பத்துப் பதினைந்தடி யுயரம் மேற்கூரை வளைவாய் உயர்ந்திருந்தது. அவ்விடத்தில் நீரோட்டத்தின் அகலமும் ஏறக்குறைய இருபதடி அகலந்தான் இருக்கும். அவ்விடத்தில் மாலைக்கால வெளிச்சம் நன்றாய்ப் பட்டதனால், அவ்வருவிக்கால் செல்லும் அம்மலைக்கணவாயின் அழகும் அதனூடு செல்லும் அருவியின் ஓட்டமும் எனக்கொரு வகையான வியப்பினையும் மகிழ்ச்சினையும் விளைவித்தன. அக்கணவாயண்டைவந்தபின் தண்ணீர் தொடையளவே யிருந்தமையால் இனி யான் மிதந்து செல்லக்கூடாதாயிற்று. ஆகவே, மெல்ல மெல்ல நடந்து கணவாயின் புறத்தேவந்தேன். புறத்தே அவ்வருவி முப்பதடிக்குமேல் அகலமாய் விரிந்து, சிறிது சரிவான ஓர் இடைவெளியிற் சென்றது. அவ் விடைவெளியின் கீழுள்ள நிலமும் முழுக் கற்பாறையேயாகும். இங்கே தண்ணீர் முழங்கால் அளவுதான் இருந்தது. கீழ்நிலத்தில் உருண்டைக் கற்களாவது சிறுபாறைகளாவது இல்லாமையால் இவ் விடத்தில் நடப்பது முன்போல் எனக்கு அவ்வளவு வருத்தமா யில்லை. ஆனாலும், இந்த இடத்தில் தண்ணீர் ஒட்டம் மிக விரைவா யிருந்தமையால், நடைதள்ளாடி நின்று நின்று சென்றேன். இருபுறத்துஞ் செங்குத்தான மலைகள் வான் அளாவித் தோன்றின. தலைக்குமேல் திறப்பாய் மாலைக்காலத்து வான் சாம்பல்நிறமாய்த் தோன்றிற்று. எனக்கு எதிரில் நீரோட்டமும் அதுசெல்லும் மலைக் கணவாயும் வரவர அகன்றுகொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/263&oldid=1582548" இலிருந்து மீள்விக்கப்பட்டது