உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

235

மலைச்

போயின. க்கணவாய் எட்ட எட்ட வளைவாய்ச் சென்றமையால் எனக்கு எதிரே செங்குத்தான L சுவரையன்றி வேறொன்றையும் யான் காணக்கூடவில்லை. இருபுறத்துமுள்ள அம் மலைச் சுவர்களில் மரங்களின்வேர்களுஞ் சிற்சிலசெடிகளும் வளர்ந்து தொங்கின. கதிரவன் மறைந்து செல்லும் மேற்றிசை யிதுவென்றும் என்னால் தீர்மானிக்கக் கூடவில்லை. வரவர வெளிச்சமோ குறைகிறது. நீரோட்டத்தை விட்டு ஏறுவதற்குக் கரையோ அகப்படவில்லை. இன்னுஞ் சிறிதுநேரத்தில் என் நிலைமை எவ்வாறாய் முடியுமோ என்பதை நினைக்க என்மனம் மருண்டு கலங்கியது. உடம்புமுழுதுங் குளிர் மிகுதியால் உதறியது. தண்ணீர் முழங்காலுக்குமேற் சிறிதே யிருந்தாலும், அதுமிகு விசையோடும் ஓடுவதால் ஓரிடத்திற் சிறிதுநேரமாயினும் யான் நிற்கக் கூடவில்லை. இவ்வாறு பெருந் துன்பத்தோடும் மனத் திகிலோடும் இறைவனையன்றி ஏதொருதுணையு மின்றித் தன்னந் தனியேனாய் அம்மலைக் கணவாயினிடையே சென்ற எனது இடரான நிலையை யானே விரித்துச் சொல்வதை விட, என்னுயிரனைய தாங்களே அதனை நினைத்துப் பார்த்தால் நன்குவிளங்கும். இங்ஙனமாகப் பின்னும் ஒருமணிநேரம் அம் மலைக் கணவாயின் ஊடே தண்ணீரில் நடந்துசென்றேன்; இனி நடக்கமுடியாமற் கால் ஒய்ந்துபோகும் நேரமும் உடம்பு களைத் விழும் நேரமும் வந்தது. அந் நேரத்தில் இறைவனருளால் இந்நீரோட்டத்தின் இருபுறத்துந் தண்ணீர் மட்டத்திற்குமேல் இரண்டு மூன்றடி உயர்ந்த மலைப்பாறை செங்குத்தான மலைச்சுவரின் அடியிற் கரையாகச் சென்றது. அந்தக் கரையைக் கண்டதும் என்னுயிர் எனக்குவந்தது. நெடுவழி என்னைத் தூக்கிவந்த செப்புக் குடத்தை இப்போது யான் தூக்கி இடுப்பில் இடுக்கி வந்தமையால், அதனை முதலில் அந்தக் கரைமேல்வைத்து நீரோட்டத்தைவிட்டு அதன்மேல் ஏறினேன். முதலில் எனது ஆடையிலுள்ள தண்ணீரை யெல்லாம் நன்றாய்ப் பிழிந்து கூந்தலிலும் உடம்பிலும் உள்ள ஈரத்தைத் துவர்த்திப், பிறகு ஆடையை நன்றாக நீரில் அலைசிப் பிழிந்து உடுத்துக் காண்டேன். இப்போது என்னால் தாங்க முடியாத களைப்பும் பசியும் நாவறட்சியும் உண்டாயின. அதனால், அந்தப் பாறைக் கரையின் மேல் அங்ஙனமே விழுந்து படுத்தேன். என்னை அறியாத தூக்கம்வந்து என்னைக் கவிந்து கொண்டது.மறுபடியும் யான் கண்விழித்துப் பார்க்கையில், பகல்வெளிச்சம் மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/264&oldid=1582549" இலிருந்து மீள்விக்கப்பட்டது