உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் -14

போய்விட்டது, மங்கல் மாலைவெளிச்சம் மட்டும் வைகறைப் பொழுதுபோற் றோன்றியது. அதனால், யான் ஓர் இராப் பொழுது முற்றுந் தூங்கித்தான் எழுந்தோனோ வென்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. அது மாலைப் பொழுது தான். தலைக்குமேல் வானிற் பாதிமதி பளிச்சென்று காணப் பட்டது.

ஒருமணி நேரமாவது யான் நன்றாய்த்

தூங்கியிருக்கவேண்டும். இப்போது என்உடம்பிலுள்ள அயர்வு பெரும்பாலும் நீங்கியது. ஆனால், பசியின்கொடுமை தாங்கக் கூடியதாயில்லை. வீட்டி லிருக்குங்கால் இரண்டுநாட் பட்டினி கிடந்தாலும் எனக்கு இவ்வளவுபசி தோன்றியதில்லை. இன்று காலையிற் சிறிதுஉணவு கொண்டிருந்துந், தண்ணீரில் நனைந்த படியாய் நீள வழிவந்த வருத்தத்தால் இவ்வளவு கொடும்பசி தோன்றலாயிற்றென உணர்ந்தேன். ஆனால், உணவுக்கு அங்கே ஏதுகிடைக்கப்போகிறது! என்று செங்குத்தான அம் மலைச் சுவரை நெடுக நோக்கினேன் யானிருந்த இடத்திற்குச் சிறிது முன்னே என் பக்கத்துச் சுவரில் கொவ்வைக் கொடிகள் படர்ந்து அடர்ந்து தொங்கின. அவற்றை உற்றுநோக்க அவற்றின் இடையிடையே பவளம்போற்சிவப்பான கொழுங்கனிகள் நிறையக் காணப்பட்டன. உடனே யான் எழுந்து அக்கொடிகளின் கிட்டப் போய்ப்பார்க்க அவை என் தலைக்குமேல் என கை எட்டக்கூடிய அளவுக்குமேல் இரண்டு மூன்றடி உயரத்தில் இருந்தன. இவ்வுற்ற நேரத்திலும் யான் கொண்டுவந்த அம்மையின் திருக்குடம் எனக்குப் பெரிதும் பயன்பட்டது. அக் குடத்தைக் கவிழ்த்து அதன்மேல் ஏறிநின்று தாவி அக்கொவ்வைக்கொடியைக் கீழ்இழுத்து, அதில் நன்றாய்ச் சிவக்கப் பழுத்துக் கனிந்திருந்த பழங்களை எனக்கு வேண்டுமளவு பறித்து, அவற்றை அருவி நீரிற் கழுவி யெடுத்து, அம்மையைத் தொழுது அயின்றேன். அவ்வளவு இன்சுவையுடைய பழங்களை இதற்குமுன்யான் எங்கும் உண்டதே யில்லை. அவைகளை என் பசி அடங்கும் மட்டும் அயின்று, அவ்வருவிநீரும் பருகியபின் என் கொடும்பசி அடங்கியது. அதன்பின் மேலுஞ்சில கொவ்வைப்பழங்களைப் பறித்துக் குடத்தினுள் வைத்துக்கொண்டு அம்மலைப்பாறைக் கரையின் மேல் நீளச் செல்வேனாயினேன். அந்தக் கரை இப்போது மூன்று நான்கடி அகலம் இருந்தது. தன்னந் தனிமையாய்ச் செல்வதும், போகப் போக இது கொண்டு

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/265&oldid=1582550" இலிருந்து மீள்விக்கப்பட்டது