உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

237

போய்விடும் இடத்தின்றன்மை தெரியாமையும், இவ்வாறு எத்தனை நாழிகை அல்லது எத்தனை நாள் இம்மலைப் பக்கங்களில் அலைந்து திரியவேண்டுமோ என்னும் நினைவும், இம் மலைநாடெங்குந் திரியும் அக்கள்வர்கள் என்னைத் தாம் வைத்த சிறையிற் காணாமையால் உடனே தேடிவந்து என்னைத் திரும்பவும் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்னும் அச்சமுந் தவிர வேறு எனக்கு அச்சத்தை உண்டுபண்ணத்தக்க கொடிய விலங்குகளாவது நச்சு உயிர்களாவது வரையில் யான் வந்த வழியிற் காணப்படவில்லை.

இது

இவ்வாறு பலதலையாய்க் கலங்கிய உள்ளத்தோடும் இறைவியை நினைந்தபடியாய் அவ் வழியே சென்றேன். ப்போது பகல்வெளிச்சம் முற்றிலும் மறைந்துபோய்விட்டது. ஆனாற், பாதிமதி தெளிந்த நீலவானிற் குளிர்ந்த பேரொளி வீசியது.யான் செல்லும் அவ் விடமெல்லாம் நிலவின்வெளிச்சம் படுதலால் வெண்மையாகத் தோன்றின; யான் போகும்வழியுந் தெளிவாய்த் தெரிந்தது. யான், இப்போது செல்லும் மலைக் கணவாய்க் கரையின் பக்கத்தே செல்லும் அருவியானது வரவர அகலமாய்க் காணப்பட்டதோடு, கரையின் கீழே வரவரச் சரிந்து ஆழத்திற் சென்றது. யான் நடக்குங் கரையொ மேல் ஏற ஏற எனக்குமுன் உயர்ந்து போவதால் ஏறி நடப்பது இப்போது எனக்கு வருத்தமாயிருந்தது. என்றாலும் நின்று நின்று மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தேன். என் பக்ககத்திலுள்ள செங்குத்தான மலைச்சுவர் போகப் போகக் குறுகியது. கடைசியாக யான் செல்லுங்கரையும் செங்குத்தான மலைச்சுவரின் உச்சியும் ஒரே மட்டமாயிருக்கும் இடத்தில் வந்து சேர்ந்தேன்.வந்துசேர்ந்தபின் அங்கு அந்தக் கரையின் ஓரமாய் நின்ற ஒரு மிகப் பெரிய ஆலமரத்தின வேரைப் பற்றிக்கொண்டு கீழேநோக்கினேன். என்னைச் சுமந்து கொண்டு வந்த அருவியானது யான் நின்றவிடத்திற்கு ஒரு பனைமர உயர ஆழத்தில் ஏறக்குறைய நூறடி அகலமுள்ளதாய்ச் செங்குத்தான ஒரு மலைச் சுவரின்மேற் கீழ்வழிந்தது. வழிந்தநீர் அங்கிருந்து இன்னும் ஒருபனைமரஉயர ஆழத்திற் காணப்பட்ட மட்டமான ஒருபெரிய மைதான வெளியில் வீழ்ந்து பரவியோடக் கண்டேன். மேலிருந்து அது வழிந்துவிழும் இடத்தில் ஒரு பெரும் பள்ளமான நீர்நிலை அமைந்திருக்கவேண்டுமென எண்ணினேன். ஏனென்றால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/266&oldid=1582552" இலிருந்து மீள்விக்கப்பட்டது