உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் -14

அங்கே அவ் வருவிநீர் விழுதலால் ஒவென்னும் ஒரு பேரிரைச்சல் ஓயாது அப் பக்கமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. இழிந்தநீர் நொப்பும் நுரையுமாய் வெள்ளை வெளேலென்று அலையலையாய் மிகு விரைவாய்ப் போய்க்கொண்டிருந்தது. ங்ஙனம் வந்துவிழும் இவ் வருவி நீரின் பக்கத்தே யான் ஏறிவந்தகரையேயில்லாமற் செங்குத்தான வெறுஞ்சுவரே இருந்திருக்குமாயின், யான் அவ்வருவி நீரோடு கூடவே வந்து இங்கே கீழ்விழுந்து இதற்குள் மாய்ந்து போயிருக்க வேண்டுமே! என்று நினைந்து திகில் கொண்டேன். என்னைப்போல் இவ்வழியில் தப்பித் தவறிவரும் ஏழைமக்களையும் பிற உயிர்களையுங் காக்கும் பொருட்டாகவோ எல்லா இரக்கமும் வாய்ந்த இறைவன் செங்குத்தான இம்மலையடி வாரங்களிலும் இவ்வருவிநீருக்குக் கரையை அமைத்துவைத்தான்! என் றெண்ணி ஐயன் படைப்பின்றிறத்தை வாழ்த்தினேன்.

நிலாவெளிச்சம்

முன்னையிலும் விளக்கம்மிகுந்து திகழ்ந்தது; வானம் மாசுமறுவின்றித் தெளிந்த நீலநிறமுடையதாய் வெண்மையான அந்நிலவொளியோடு மாறுபட்டுத் தோன்றியது. யான் இப்போது வந்துசேர்ந்த இடத்திலிருந்து நாற்புறமும் பார்க்கக்கூடியவாய் இருந்தன. என்னைக் கொண்டுவந்த அருவிநீர் மேற்குமுகமாய் ஓடிற்று. யானும்மேற்கு நோக்கிய படியாய் நின்றேன்.அவ்வருவிக்குத் தென்னண்டையிற் காடுகளால் மூடப்பட்ட மலைத்தொடர் வான் அளாவித் தோன்றியது. எனக்கு இடப்புறத்தேயிருந்த அம்மலைக் காடுகளிலிருந்து வேங்கைப்புலியின் உறுமும் ஒலியும், மற்றுஞ்சில விலங்கினங் களின் ஓசையுங் கேட்டன. எனக்கு வலக்கைப் புறத்திலோ மட்டமானவெளியுஞ் சிறிதுசிறி துயர்ந்த மலை மேடுகளுஞ், சிறிது சிறிது ஆழ்ந்த மலைப் பள்ளங்களும் இருந்தன; ஆங்காங்குப் பெரியபெரிய மரங்கள் இருந்தனவேயல்லாமல் காடுகள் இல்லை. யானிருந்தபக்கத்திற் காட்டுவிலங்குகளின் இரைச்சல் சிறிதும் இல்லை. அதனால், யான் இந்தப்பக்கத்துக் கரையில் ஏறிவரும்படி அறிவுதந்த இறைவியின் அருளுக்கு ஏழையேன் எங்ஙனங்கைம்மாறு செலுத்தவல்லேன்! இடக்கைப் பக்கத்துக்கரையிலேறி அந்தப் பக்கமாய்ச் சென்றிருப்பேனானால் அக் காட்டில் அகப்பட்டு மறவிலங்குகளுக்கு இரையாய்ப்போ யிருப்பேன். ஆகையாற் ‘கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார்’ என்னும் பழமொழியின் உண்மை என் உள்ளத்தில் அழுந்திப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/267&oldid=1582553" இலிருந்து மீள்விக்கப்பட்டது