உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

239

பதிந்தது. எனக்குப் பின்னாலும் மலைகள் அடுக்கடுக்காய் வான்அளாவித் தோன்றின. யானிருந்தபக்கத்தில் எனக்கெதிரே மேற்கில்மட்டும் எனக்குத் தடையாய் மலைகள் வளர்ந்து உயர்ந்ததில்லை. அதனாலும், பம்பாய் நகரமானது மேற்குக் கடற்கரை ஒரமாய் இருப்பதொன்றதலாலும், அம் முகமாகவே யான் செல்லல் வேண்டுமென உறுதி செய்தேன். இப்போ தெனக்கு மீளவும் பசியுங்களைப்பும் வந்தமையால்,யான் குடத்திற் கொண்டு வந்த கொவ்வைக்கனியையருந்திக், குடத்தி லெடுத்து வந்த அருவி நீருஞ் சிறிதுபருகினேன். இராப்பொழுதிற்கு இவ்விடத்திலேயே படுத்திருந்து காலையிலெழுந்து செல்லலாமா முதலில் நினைத்தேன். அடுத்தாற்போல் அது கூடாதென்று எண்ணினேன். என்னைக் காணாமையால் அக் கள்வர்கள் விடியற்காலையிலேயே இப்பக்கமெல்லாம் வந்து என்னைத் தேடிப்பிடிக்க முயல்வார்க்ள். ஆதலால், உடனே

என்று

வ்விடத்தை விட்டுச் சிறி துந்தாழாமற் செல்லல்

வேண்டுமென்று அச்சத்தால் உந்தப்பட்டு எழுந்தேன். இல்லா விட்டால், இதற்குமுன் என்வாழ் நாளில் இத்தகைய வருத்தங்களை யடைந்திராத என்னுடம்பிற்கு நேர்ந்த களைப்பும் உழைப்பு மானவை என்னை அங்கேயே படுத்து உறங்கச் செய்திருக்கும். எழுந்து என் மனம்போனவாறு மேற்குத்திக் கினையே குறியாக வைத்துக்கொண்டு நடந்து சென்றேன். மேடு பள்ளங்களில் ஏறியும் இறங்கியுஞ் சென்றேன். இன்றிரவு நிலாவெளிச்சம் எனக்குச் செய்த பேருதவி என்றும் என் வாழ்நாளில் மறக்கற் பாலதன்று. அங்குள்ள அக் குறிஞ்சி நிலத்தில் அந்நேரத்தில் யான் எவ்வளவு விரைவாய் நடக்கக் கூடுமோ அவ்வளவுவிரைவாய் நடந்தேன். மதியமோ வரவர மேற்றிசையிற் சாய்ந்து போக, அதன் நிலவு வெளிச்சமும் வரவரக் குறைந்துவந்தது. எனக்கோ ஆற்றப் பொறாத இளைப்புங் களைப்பும் வந்து சேர்ந்தன. இப்போது நிலவொளி முற்றும் மறைந்துபோயிற்று. எங்கும் வெருக்கொள்ளத்தக்க பேர் இருள் பரவிற்று என் காலடிகள் இனி நடக்க முடியாதென்னும் படி எரிவெடுத்தன. எங்குங் கரியமைக்குழம்பைக் கரைத்து விட்டாற் போல இருள் திணிந்திருத்தலால் எனக்கு வழி துறையொன்றும் புலப்படவில்லை. என்னுடம்பின் அயர்வோ தாங்கமுடியாமல் அவ்விடத்தே

L

ஒருமட்டமான பாறைமேற் சோர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/268&oldid=1582556" இலிருந்து மீள்விக்கப்பட்டது