உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் -14

படுத்துவிட்டேன். இந்நேரத்தில் ஒரு மலைப்பாம்பு என்னை எடுத்து விழுங்கினாலும், அல்லதொரு வேங்கைப்புலி யடித்தாலுந் தெரியாது. அவ்வளவு துணையற்ற நிலைமையில் இறைவியையே நம்பிக்கிடந்தேன்.

சிறிதுநேரம் அவ்விடத்தில் நான் நன்றாய் உறங்கியிருக்க வேண்டும். அவ்வுறக்கங் கலையுந்தறு வாயில் ஒரு கனவுகண்டேன். முழுமதியைச்சூழக் காணப்படும் ஓர் ஒளிவட்டத்தைப்போன்ற தொன்று அக் கனவின்கண் என் எதிரே தோன்றக்கண்டேன். அவ் வட்டத்தை யான் கண் இமையாமல் நோக்க அதன்நடுவில் ஒரு பெரியவர் உருவந் தோன்றியது. முதலில் அது மங்கலாயிருந்தது. அதனை நான் உறுத்து நோக்க நோக்க அஃது ஒளிமிகுந்து துலக்கமாய்க் காணப்பட்டது. இப்போது அவ் வுருவத்தின் திருமுகத்தை அமைதியாய்ப் பார்க்க அஃது இறந்து போன என் மாமனாரது முகமாய்ப் புலப்பட்டது. அவரைக் கண்டதும் எனக்கு ஆற்றெணாத்துயரம் மிகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகிற்று. “அன்பும் அறிவும் இரக்கமும் ஒர் உருவெடுத்தா லொத்த மாமா, தாங்கள் இறந்துபோன தாகவன்றோ நினைத்தேன்! இதோ தாங்கள் உயிரோ டிருக்கிறீர்களே! தெய்வத் தன்மைவாய்ந்த பருமானே,அத்தனை நாளாகத் தாங்கள் எளியேனை விட்டு எங்கே சென்றிருந்தீர்கள்?” என்றுசொல்லி அவர் திருவடிகளைப் பிடித்து என்கண்களில் ஒற்ற முயன்றேன். ஆனால், அவை என் கைகளுக்கு அகப்படவில்லை.பிடிக்கப்பிடிக்க முயன்றும் அவையகப்படாமல் இடைவெளியில் நிற்கக் கண்டு வியப்புற்று அவரது திருமுகத்தைப் பார்க்க, அவர் என்னைப்பார்த்துப் புன்சிரிப்புக்கொண்டு “குழந்தாய், நான் இறந்து போகவில்லை. எனது பழையஉடம்பு பழுதாய்ப் போனபடியால், அதனைவிட்டு வேறொரு சிறந்த உடம்புபெற்று வேறோர் உயர்ந்த உலகத்திலிருக்கின்றேன். நீ உன்னால் நீக்கிக்கொள்ள முடியாத இடரான நிலைமையி லிருக்கும்போது உனக்கு நான் உதவிசெய்ய வருவேன் என்று உன்னிடஞ் சொல்லிச்சென்ற படி இப்போ திங்குவந்தேன்.யான் இங்கேவருவதற்கு இசைந்து என்னை யழைத்துக்கொண்டு என்னுடன் வந்திருக்கும் இத்தெய்வப் பெருமானை வணங்கு என்று தனக்குமேற்சுட்டினார். அவர் சுட்டிய இடத்தைநோக்கச் சொல்லுக்கடங்காப் பேரழகும் பேரொளியும் வாய்ந்த ஒரு தேவவடிவம் என் கண்கட்குப் புலனாயிற்று. அதனை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/269&oldid=1582558" இலிருந்து மீள்விக்கப்பட்டது