உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

241

இன்னதென்று வாழ்த்தும் வகையறியாப் பேதையேன் நெஞ்சம் நெக்குநெக்குருகக் கைகளைத் தலைமேற் குவித்துப் “பாவியேன் கண்கட்குப் புலனான அருட்கடலே தேவரீரை எங்ஙனம் வாழ்த்துவேன்! எவ்வாறு வணங்குவேன்!” என்று அழுதுரைத்தேன்; அஃது, என்மேற் புன்சிரிப்புற்று என் தலைமேற் றன் கைகளை நீட்டியது. அதன்பின் யான் அதனை மறுபடியும் நிமிர்ந்து பார்க்க அஃது என் கண்களுக்குப் புலப்படாதாயிற்று. இதற்குள் அத் தேவவடிவத்தின் கீழ்நின்ற என் மாமனார் அருமைக் குழந்தாய், நீ மிகவும் பொல்லாத இடத்தில் இப்போதிருக்கின்றாய். இனி, ஒரு நொடிப்பொழுதும் இங்கிராதே, எழுந்து என்னுடன்வா”. என்று சொல்லித் திரும்பி என்முன்னே நடந்தனர். அவர் சொல்லிய சொற்களைக்கேட்டு என் நெஞ்சம் பதைத்து எழுந்தேன். அவர் பிறகே சென்றேன்.யான் செல்லும் வழியெல்லாம் ஒரே ஒளியாயிருந்தது. ஓர் ஆள் மட்டுஞ் செல்லத்தக்க மலையோரங்களிலும், காடுகளினும், கீழ்நோக்கினாற் கிடுகிடு பள்ளமாயிருக்கும் இடங்களின் விளிம்புகளினுஞ் சிறிதும் அச்சமின்றி அவ்வுருவத்தைப் பின்பற்றிப் போயினேன். இப்போது யான் நிலத்தின்மேற் சென்றாலும் என் அடிகள் நிலத்திற் பாவுவதுபோற் காணப்பட வில்லை. என் அடிகளுக்காவது, என் உடம்புக்காவது சிறிது வருத்தந் தோன்றவில்லை. அதனால், யான் கனவுநிலையி லிருக்கின்றேனோ அல்லது நனவு நிலையிற்றான் இருக்கின் றேனோ, இன்னதுதானென்று உறுதிப்படுத்ததக்கூட வில்லை. இவ்வாறாக நடந்து செல்கையிற் கிழக்கு வெளுத்தது; காக்கை கரைந்தது; பல்வகைப் பறவைகளும் அங்குமிங்குமாய்ப் பறக்கலாயின; உடனே எனக்கு முற்சென்ற என்மாமனார் திருவுருவத்தைக் காண்கிலேன். சிறிதுநேரத்திற் பகலவன் கிழக்குத்திக்கிற் செந்நிறத் தழல்வடிவாய்த் தளதளவென்று தோன்றினான். யான் ஒருபக்கத்து மலைத்தொடரின்மேற் புகைவண்டி செல்லும் இருப்புப்பாதை ஓரத்தில் நின்றேன். தொலைவிற் புகை வண்டியின் சீழ்க்கை ஒலி வந்தது. வரப்போவது பம்பாய்க்குச் செல்லும் வண்டியாயிருக்கலா மென்பது என் மனத்திற் பட்டது. இரண்டொரு நொடியில் வண்டி வருவது தெரிந்தது. உடனே என் முன்றானையை அவிழ்த்து விசிறினேன். யானிருக்கும் மிடத்திற்கு மெதுவாய்வந்து அவ்வண்டி நின்றது. உடனே அவ்வண்டிக்குக் காவலாய்ச்செல்லும் வெள்ளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/270&oldid=1582560" இலிருந்து மீள்விக்கப்பட்டது