உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் -14

காரத்துரை ஒருவரும் இரண்டு சேவர்களும் வண்டியை விட்டிறங்கி வியப்போடும் என்னிடம்வந்து என்னை அவர்கள் ஆங்கில மொழியிலும் இந்துஸ்தான் மொழியிலும் வினவினார்கள். எனக்குத் தமிழ் ஒன்றைத்தவிர வேறுமொழி தெரியாதென்று சொல்ல, அந்த வெள்ளைக்காரர் வண்டி நெடுகப்போய்க் கேட்டுத் தமிழ் தெரிந்த தென்னாட்டார் ஒருவரை என்பால் அழைத்து வந்தார். அவரிடஞ் சுருக்கமாக யான் கள்வர்கையில் அகப்பட்டு மீண்டதைத் தெரிவித்து யான் பம்பாயில் இன்னார் வீட்டுக்குச் செல்ல வேண்டு மென்பதையுங் குறிப்பித்தேன். சேவகர்கள் யான் சொல்லியவைகளை யெல்லாங் குறித்துக் கொண்டு, என்னை அன்போடும் இரக்கத்தோடும் மரியாதையாக வண்டியிலேற்றிப் பம்பாயில் அந்தப் பாரசிக அன்னையார் மாளிகையிற் கொண்டு வந்து சேர்ப்பித்து அந்த அம்மையாரிடம் ஒப்புவித்து, மறுபடியும் வருவதாகக் கூறிச் சென்றார்கள்.

இன்னும் ஒருமணிநேரத்தில் நாங்கள் புறப்படப் போகின்றோம். என் ஆருயிர்பெருமானே, தங்கள் அன்பின் திறத்தாலும், எல்லாம் வல்ல கடவுளின் அருளாலும் நாங்கள் இவ்விடத்திற்கு மீண்டபின் மற்ற வரலாறுகளும் விரிவாய் எழுதுவேன். இப்போது தங்கள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவற்றை முத்தமிடுகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/271&oldid=1582561" இலிருந்து மீள்விக்கப்பட்டது