உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

கடிதம் - 17

·

என் இன்னுயிர்த் தெய்வமாய்,

ஆறு

என்னிரு கண்மணியாய்த் திகழும் என் இன்பப்பெருமானே! நான்கு நாட்களுக்குமுன் யான் எழுதிய கடிதம் பெற்றிருப்பீர் களென்று நம்புகின்றேன். அக்கடிதத்தை மிகவும் விரைவாய் எழுதித் தபாற்சாலைக்கு அனுப்பியபின் ஒருமணி நேரத்தி லெல்லாம் வண்டிக்குப் புறப்பட்டோம். யான் முற்கடிதத்தில் தெரிவித்திருந்த படியே பன்னிரண்டு சேவகர்களும் நுண்ணறிவு வாய்த்த ஓர் அதிகாரியும் எங்களிடம் வந்துசேந்தார்கள். அந்தப் பாரசிக அம்மையார்க்கு நெருங்கிய உறவினரான ஆண்பாலாருங் கூட வந்து சேர்ந்தனர். நாங்கள் திரும்பிவரும் வரையில் அந்த அம்மையார் தம் குழந்தைகளையெல்லாம் நன்குபாதுகாக்கும் படி அக்குழந்தைகளோடு நெருங்கிப் பழகிய ஏவற் காரிகள் சிலரையும் உறவினரான பெண்பாலார் சிலரையுந்திட்டப் படுத்தினார். தம் பெரியபெண் பிள்ளையை அருகழைத்து அதன் மனத்தைத் தேறுதலாய் வைத்துக் கொள்ளத்தக்க மொழிகளைச் சொன்னார். யானும் அப் பெண்ணுக்குப் பலவகையான தேறுதல் சொன்னதோடு நான்கு நாளில் ஐயாவைக் கட்டாயம் அழைத்துவருவதைப் பற்றியும் வற்புறுத்திச் சொல்லி முத்தமிட்டேன்.யான் நேற்றிரவெல்லாம் மலையிலும் காட்டிலும் அலைந்து வந்தமையால் மறுபடியும் இன்றைக்கு அவ்வழியில் நீள நடந்து செல்வது இயலாமை யாயிருக்கும் என்று மெல்லிய அடிகளையுடைய அப்பாரசிக அன்னையார் கரடு முரடான அவ்வழியில் நடப்பது கூடாமை யாயிருக்கு மென்றும் யான் சொல்லவே அவ்வம்மையார்க்கு உறவினரான ஆடவர் அறுவரும் எங்களைத் தூக்கி செல்வதற்கு சைத்து இரண்டு துணிந்தொட்டில்கள் ஒழுங்குபடுத்தி எடுத்துக்கொண்டார்கள். எங்கள் இருபத்தொரு பெயர்க்கும் ஒருவாரத்திற்கு வேண்டிய அளவு இலேசான உணவுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/272&oldid=1582562" இலிருந்து மீள்விக்கப்பட்டது