உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

பண்டங்களுந்

மறைமலையம் -14 தொகுத்தெடுத்துக்

கொள்ளப்பட்டன.

ஆண்பாலாரிற் சேவகர்களும் அதிகாரியும் மட்டும் கைத் துப்பாக்கிகளுங் கத்திகளும் இடுப்பிலுந் தொடையிலும் வைத்துக் கட்டிக்கொண்டார்கள். மற்ற அறுவரும் முனையிற் கூரியவேல் உள்ள நீண்ட குத்துக்கோல்களைப் பிடித்துக்கொண்டார்கள். என்னை மிதப்பித்துக் கொண்டுவந்தஅம்மையின் திருக்குடத்தை இப்போதும் எனக்குத் துணையாக எடுத்துக்கொண்டேன்.பாரசிக அன்னையாரும் ஒருகால் தண்ணீரிற் செல்லவேண்டி நேர்ந்தால் அதற்கு உதவியாக ஒரு சுரைக்குடுக்கையுங் கூட எடுத்துக் காண்டோம். பிறகு யானும் அம்மையாருங் காற்சட்டை மேற்சட்டையிட்டுத் தலையிற் குல்லா வைத்துக்கொண்டோம். எங்களுக்குள்ள பெரிய துன்பத்தின் இடையில் யாங்கள் இருவரும் ஆண்கோலம்பூண்டு ஆண் மக்களுடன் நிற்கலானது எங்களுக்கு ஊடேஊடே நகையினையும் நாணத்தினையும் விளைவித்தது. என்செய்யலாம்! ஊழ்வினையின் வலி மிகப்பெரிது!

L

அம்மையார்க்கு உறவினரான ஆண்பாலார் அறுவர்மட்டும் எங்கள் ஆண்கோலத்தைப் பார்த்துப் புன்சிரிப்புக் கொண் டார்கள். சேவகர்களும் அதிகாரியும் அங்ஙனம் புன்சிரிப்புக் கொண்டிலர்."பெருமாட்டிமார் இருவர்க்கும் இவ்வாண்உடுப்பு அழகாகவே யிருக்கின்றது.” என்று அமைதியோடு சொன்னார்கள். இன்னுஞ் சில சில்லறை ஏற்பாடுகளுஞ் செய்தான பின் மாலையில் எல்லாரும் புகைவண்டிநிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அன்றைக் காலையில் என்னை வண்டியில் ஏற்றிவந்த வண்டிக்காவல் வெள்ளைக்காரரும் மற்றிரண்டு சேவகரும் எங்களுடன் கலந்து பேசியபின், எங்களையெல்லாம் யான் வண்டியிலேற்றப்பட்ட மலைப் பக்கத்திற் கொண்டுபோய் இறக்க வேண்டுமென்பது தீர்மானஞ் செய்யப்பட்டது. பின்னுஞ் சிறிது நேரத்தில் யாங்கள் எல்லாரும் வண்டியில் ஏற, வண்டிபுறப்பட்டு, இரவிற் பத்து மணிக் கு யாங்கள் இறங்கவேண்டிய ய மலைப்பக்கத்தில் எங்களைக் கொண்டுவந்து இறக்கிப்போயிற்று.

இப்போது வான த்தின்கண் நிலவின் ஒளிவிரிந்து கீழுள்ள அம் மலைநாட்டிடங்களையெல்லாந் தெளிவுறக் காட்டிற்று. ஆள் வழக்கம் இன்றித் தன்னந்தனியாயுள்ள அப் பக்கங்களில் யான் ஒன்றியாய் வந்தகைப் பற்றி அன்னையார் மிகவும் வருந்திக் கூறிப் பிறகு உயிர்பிழைத்து யான் வந்தமைக்காகக் கடவுட்கு நன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/273&oldid=1582564" இலிருந்து மீள்விக்கப்பட்டது