உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

245

ல்

செலுத்தினார். மற்ற ஆடவர் எல்லாரும் யான் அம் மலை நாட்டிற் றனித்து வந்ததைப் பேசிப் பேசி வியந்தனர். அம்மலைநாட்டி எங்கோ ஒருகுகையிற் சிறையாய்க் கிடக்கும் நம்மவர் இருவரையுந் தேடிக் கண்டு பிடிப்பதற்குப் பகற்பொழுதில் இப் பக்கத்தே ப் செல்லவேண்டுவதாயிருக்க, இராப்பொழுதில் சென்றது

எதனாலென்று தாங்கள் நினைக்கக்கூடும். யான் அம்மலை களினிடையே நடந்து வந்தது இராப்பொழுதே யாகையால் அப்பொழுதில் அங்கே சென்றால் தான் யான் வந்தவழியின் அடையாளத்தை யான் கண்டு கொள்ளக் கூடும். ஒளி மிகுந்த பகற்காலத்திலானால் யான் அவ்வழியின் அடையாளத்தைக் கண்டு செல்லுதல் இயலாதாகும். அன்றிரவு யான் வந்த வழியின் அடையாளம் இப்போது எனக்கு நன்றாய்த் தெரிந்தது. அன்றிரவு எம்மாமனார் எனக்கு முன்னே வழிகாட்டிச் செல்ல, அவர்க்குப் பின்னே தோன்றிய ஒளிக்கும் இப்போது வீசும் நிலவொளிக்கும் வேற்றுமை மிகுதியாயில்லை. ஆதலால், யான் முன்னே வழிகாட்டிச் செல்லத் துவங்கினேன். அம்மையார் என்னோடு பக்கத்தே வரலானார். நாங்கள் நடப்பதைக் கண்டு எங்கள் உறவினரான ஆடவர் அறுவரும் எங்களை இப்போது தொட்டிலில் தூக்கிக்கொள்வதாக வற்புறுத்திச் சொன்னார்கள். ‘எங்களால்' நடக்கக் கூடியவரையில் நடப்போம், நடக்க முடியாத இடங்களில் மட்டும் அவ்வாறு உதவிசெய்தாற் போதும்' என்று யான் சொல்கையில், அம்மையார் 'குழந்தையாகிய நீ நேற்றிரவு முழுதும் அலைச்சலுற்றதனால், நீ தொட்டிலிலிருந்த படி யே வழிகாட்டிச் சொல்லலாமே' என்றார்கள். ஆயினும், நறுமணங்கமழும் அல்லிமலர் அனைய அவ் வன்னையார் இதற்கு முன் நடந்தறியாத அவ்வல்நிலத்தில் நடந்துவர, யான் மட்டுங் தொட்டிலேறிச் செல்வது என்மனத்திற்கு இசையாமை யாற் “சிறிது நேரமேனும் யான் நடந்துவருதற்கு விடைதரல் வேண்டும்” என யான் கெஞ்சிக் கேட்டதன்மேல் அவர்கள் சும்மா இருந்தார்கள். இவ்வாறாக இரண்டுமணிநேரம் வரையில் யாங்கள் நடந்து சொன்றோம். ஆடவர்கள் எங்களினும் விரைந்து நடக்கக்கூடியவர்க ளாகையால், எங்களுடன் வந்த வலிமையும் ஆண்மையும் மிக்க ஆட்களெல்லாரும் எங்களுடன் மெல்லென நடப்பது தமக்குப் பெருவருத்தமாயிருக்கிறதென்று தெரிவித்து எங்களைத் தொட்டிலில் ஏறிக்கொள்ளும்படி வற்புறுத்தி வேண்டினார்கள். எங்கட்கும் இனி நடப்பது வருத்தமாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/274&oldid=1582565" இலிருந்து மீள்விக்கப்பட்டது