உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் -14

உட

தோன்றவே யாங்களும் அதற்கு இசைந்தோம். டனே இரட்டுத்துணியிற் செய்த இரண்டு தொட்டில்களை எடுத்து இரண்டு குந்தக்கோல்களிற் கோத்து எங்கள் ஆட்களில் இருவர் ஒரு குந்தக்கோலின் இருமுனைகளைத் தம் தோள்களின் மேற்றூக்கிக் கொண்டார்கள்; மற்றிருவர் மற்றொன்றனை அங்ஙனமே

ஒரு

தூக்கிக்கொண்டார்கள். அம்மையார் தொட்டிலினும், யான் மற்றொரு தொட்டிலினுமாக ஏறிக் கொண்டோம். எனது தொட்டிலைச் சுமந்தவர்கள் எல்லார்க்கும் முன்னே செல்ல யான் அதிலிருந்தபடியே வழிகாட்டிக்கொண்டு போனேன். இவ்வாறு வழிநடந்து நிலவொளி மேற்றிசையில் மறையும் முன்னமே, என்னைத் தூக்கிவந்த அருவிநீர் செங்குத்தான மலைப்பாறையின் மேல் வழிந்து கீழே ஒருபெரும் பள்ளத்தாக்கில் விழும் அவ்விடத்தின்கண் மேல் உயரத்தில் உள்ள ஆலமரத்தினடியில் வந்துசேர்ந்தோம். எல்லேமும் வழிவந்த வருத்தமும் அயர்வும் நீங்க அதன் கீழுள்ள மட்டமான பாறையில் அமர்ந்தோம். என்னைத் தூக்கிக் கொணர்ந்த அருவியோட்டத்தை எல்லார்க்குங் குறித்துக் காட்டி, யான் அதனைவிட்டு ஏறிய பாறைக்கரை இன்னுஞ் சிறிது தொலைவிலுள்ளதெனக் கூறினேன். இப்போது நிலவொளி மறைந்து போயிற்று. எங்கட்கு எதிர்ப்பக்கத்தேயுள்ள மலைக்காடு களிலிருந்து வந்த வலிய மற விலங்குகளின் ஓசையைக் கேட்டு எல்லாரும் “அந்தப் பக்கமாய்ச் செல்லாமல் இந்தக் கரையில் இந்த அம்மா ஏறிவந்தது தெய்வச் செயலே யாகும்!!! என்று அவரவர்க் குரிய மொழியிற் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிய மகாராட்டிரம் பாரசிகம் என்னும் இரு மொழியும் என் அம்மையார்க்கு நன்றாய்த் தெரியுமாதலால் அவர்கள் அவற்றைத் தமிழில் எனக்குச் சொல்லித் தாமுங் கடவுளின் பேரருளை நினைத்து வியந்து வாழ்த்தினார்கள். இப்போது எங்கும் பேரிருளாய் இருந்தமையால் யாங்கள் கொண்டு வந்த கைவிளக்குகளை ஏற்றிவைத்தோம். அதற்குமேல், என்னை அடைத்து வைத்திருந்த குகைக்கு நாங்கள் எல்லாருஞ் செல்ல வேண்டிய வழியைப்பற்றி ஆராய்ந்து பார்க்கலானோம்.

ரு

சேவகர்களுக்குத் தலைமையாய் வந்த அதிகாரி "இந்த அம்மா வந்த நீரோட்டத்தின் வழியாக நாம் சென்று அந்தக் குகையை அடைதல் முடியாது. மலைச்சரிவில் மிகு விரைவாய் ஓடி வரும் அந் நீரோட்டத்தின் வழியே மிதந்து வருதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/275&oldid=1582566" இலிருந்து மீள்விக்கப்பட்டது