உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

247

-

எளிது; ஆனால், அந் நீரோட்டத்திற்கு எதிர்முகமாய் அதனூடு நீளச் செல்வது எள்ளளவும் முடியாது. முழங்கால் அளவு கழுத்தளவு நீருள்ள யாறுகளில் எதிர்த்துச் செல்வதே பெரிதும் வருத்தமானதென்றால், தலைக்குமேல் நிலைகொள்ளாமல் நீர் மிகுந்து இரண்டு குறுகலான மலைச்சந்துகளினூடே சரிவில் மிகுவிரைவாய் ஒடிவரும் அதன் கண் இத்தனை பெயரும் அதிலும் பெண்பாலார் இருவரோடு, அதனை எதிர் ஊடறுத்துச் செல்வது கனவினும் முடியாது. ஆகையால், விடியும்மட்டும் நாம் இவ்விடத்திலேயே இளைப்பாறி யிருந்து, விடியற்காலையில் அக் குகைக்குச் செல்லும் வழி தெரிந்து, அதன்பின் நாம் எல்லாம் அங்கே செல்லல்வேண்டும்." என்று அறிவோடு கூறினார்.

அவர் சொல்லியவைகளை என் அம்மையார் தமிழில் விளக்கவே யான், “இந்த அருவியோட்டம் நம் கண்களுக்குப் புலப்படும்வரையில் இந்தச் செங்குத்தான மலையுச்சியின் ஓரமாய்ச் சென்று, பிறகு அது நம் கண்களுக்குப் புலப்படாத டத்திலிருந்து மேன்மேல் உயரத்திற்போய் நாம் அக் குகைக்கு வழி கண்டு கொள்ளல் வேண்டும். அக்குகையில் யான் இருந்தவரையில் நாடோறுங் காலைமாலை வெளியே சென்று காலை மாலைக் ன்களை முடித்துவந்த ஓர் அழகிய டம்உண்டு. அவ்விடத்தைத் தெரிந்து, அதில் என்னைக் காண்டுபோய்விட்டால், பிறகு அங்கிருந்து யான் அக்குகைக்கு நேரே வழிகாட்டக் கூடும். மேலும், விடியப்போகிற நாள் வெள்ளிக்கிழமை யாகையால், நாளை இரவில் இங்குள்ள கள்வரெல்லாரும் அக்குகையில் ஒருங்கு சேர்வர். நாளைக்கு அவ்விடஞ்சென்றால் அவர்க ளெல்லாரையும் ஒருமிக்கப் பிடித்துக் கொள்ளலாம். நாளைத் தவறினால் திரும்ப அடுத்த வெள்ளிக்கிழமை வரையில் நாம் இங்கே காக்க வேண்டும். அக் கள்வர்கள் இம் மலைநாட்டிற் பல விடங்களில் இருப்பதால் அவர்களைத் தனித்தனியே கண்டுபிடிப்பதுஒரு வகையினும் முடியாது.மேலும், நாம் இப்பக்கங்களில் வந்திருப்பது அவர்கள் தெரிவார்களானால், தாம் சேவகர் கையிற் சிக்காதிருத்தற்குத்தக்க விரகுகளெல்லாஞ் செய்வதோடு, நம்மையெல்லாம் பிடித்துச் சிறையிடவோ அன்றி நம்மையெல்லாம் ஒருங்கு கொன்று விடவோ முயல்வார்கள். ஆகையால், விடிந்தவுடன் நாம் மிகவும் கருத்தாய் முயன்று வழி கண்டுகொள்ளல் வேண்டும்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/276&oldid=1582567" இலிருந்து மீள்விக்கப்பட்டது