உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் -14

முகமாயிருந்து வந்து அச்சிறுகுன்றின்மேலேறி, முற்சென்றவர் களைப் போலவே சுற்றிலும் நோக்கியபின், அப்பக்கத்தே இறங்கி மறைந்து போனார்கள். இப்போதும், யாங்க ளிருந்த இடத்தை விட்டு நாங்கள் பெயரவில்லை. பின்னுஞ் சிறிதுநேரஞ் சென்றபின் பின்னும் இரண்டுபேர் அங்ஙனமே குதிரைமேலேறி அக்குன்றி னிடத்தே வந்து மறைந்தார்கள். அதற்குப்பின், வேறிருவர் அங்ஙனமே குதிரை மேல் இவர்ந்துவரச் சிறு வயதினரான ஒருவரும் அவரினும் வயதில் மூத்த மற்றொருவருந் தம்முடைய கைகள் முதுகின் புறத்தே சேர்த்துக் கட்டப்பட்ட படியாய் அவ்விருவர்க்கும் பக்கத்தே கீழே நடந்து சென்றார்கள்!-” என்று சொல்கையில் யானும் அம்மையாரும் உடலம் பதறிக் கண்ணீர் சிந்தி அவர்கள் தாம் எங்களவர்களாக விருக்கவேண்டும்! அக்கொடிய கள்வர்கள் அவ்விருவர்க்கும் ஏதோ பொல்லாங்கு செய்வதற்காகக் காளிகோயிலுக்கு நடத்திச் செல்கின்றார்கள்! ஆகையால், அவர்கள் செல்லும் இடத்திற்கு நாம் உடனே புறப்பட வேண்டும்!” என்று அம்மையார்கூற யானும் அதற்கு இசைந்து சொன்னேன்.

பிறகு அவ்வதிகாரி எங்களைப்பார்த்து “அம்மைமீர், இன்னுஞ் சிறுதுநேரத்தில் நாம் அங்கே போவோம். அந்தக் கள்வர் எட்டுப் பேரும், கடைசியாக அவர்களுடன் மற்றிருவருஞ் சென்று மறைந்த பின், இந்த அம்மா சொல்லியது என் நினைவுக்கு வந்தமையால், இந்தப் பத்துப்பேரைத் தவிர வேறு எவரும் இனி அங்குவரார்கள் எனத் துணிந்து, யாங்கள் அச்சிறு குன்றின்மேலேறி அதன் அப்பக்கத்தே இறங்கினோம். கீழே பசும்புல் வளர்ந்த ஒரு சிறு பள்ளத்தாக்கும், அதனருகே இப்போதுள்ளதாய் முன்னமே எங்கட்குத் தொலைவிற் காணப்பட்ட ஒரு பெரியமலையும், அதனின்று வழிந்து அப்பள்ளத்தாக்கில் ஓடிவரும் ஒரு சிற்றருவியும் காணப்பட்டன. அப் பள்ளத்தாக்கின் கண்ணே எட்டுக் குதிரைகள் புல் மேய்ந்து காண்டு நின்றன. அக்குதிரைகளைப் பார்த்ததும், அக்கள் வர்கள் அவைகளை அங்கேவிடுத்து அங்குள்ள ஓரிடத்திற்றான் நுழைந்திருக்கவேண்டுமென்றும், அந்தக் காளிகாதேவி கோயிலும் அதற்குச் செல்லும் வழியும் அவ்விடத் திற்றான் இருக்க வேண்டுமென்றும் முடிவுகட்டிக் கொண்டு இங்கே திரும்பினோம். இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/281&oldid=1582573" இலிருந்து மீள்விக்கப்பட்டது