உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

251

'நான் குறித்துக் கொண்ட கோட்டுக் கணக்குப்படியே இங்கிருந்து பகுக்கப்பட்ட மலைப்பகுதியில் யானும் என்னுடன் வந்த இவருமாகச் சென்றோம். பல மலைப்பக்கங்களிலும், மலைக் காடுகளிலும், மலைப் பள்ளங்களிலும் நாள் முழுதும் அலைந்து திரிந்தோம். அக் குகைக்குச்செல்லும் வழியைச் சிறிதுந் தெரிந்து கொள்ளக்கூடவில்லை. மாலைக்காலம் வரையிற் றிரிந்தும் தேடிச் சென்ற இ L ம் இன்னதென்று புலப்படாமையால் அடையாளத் தோடு சென்ற வழியிலேயே மீண்டு வருதற்கு எண்ண முற்றுத் திரும்பினோம். சடுதியில் யாரோசிலர் பேசுங் குரல் ஒலி எங்கள் செவியில் மெல்லப்பட்டது. அவ்வொலி வரும் முகமாய் நாங்கள் உற்று நோக்கத் தொலைவில் எங்களுக்கு எதிர்ப் பக்கத்தே இடது புறத்திலிருந்து வலதுபுறமாய் இருவர் மட்ட மான இரண்டு குதிரைகளின்மேல் மெல்லச் செல்லக் கண்டோம். அவ் விருவரும் அக்கள்வர் கூட்டத்திற் சேர்ந்தவராயிருக்கலா மென்று ஐயுற்று, அவர்களை அணுகிச் சென்று பார்க்கும் பொருட்டு, அவர்கள் கண்ணிற்படாதபடி நிரம்பக்குறியாய் அவர்கள் சென்றவழியே அவர்களைப் பின்பற்றிப் போயினோம். இடையிடையே மலைப் பாறைகளும், பள்ளங்களும், புதல்களும், அடர்ந்த மரங்களும் இருந்தமையால், யாங்கள் அவர்கள் கண்ணிற்படாதபடி செல்வது எளிதாயிருந்தது. இவ்வாறு அவர் கட்கும் எங்கட்கும் இடை இடையிலே முந்நூறு நானூறு அடி இருக்குமாறு யாங்கள் மறைந்து செல்லாநிற்க, முடிவாக அவர்கள் ஒருசிறு குன்றின்மேலேறி நின்று நாற்புறமும் நோக்கினார்கள். அவர்கள் அங்ஙனஞ் சுற்றிலும் நோக்கிய பார்வையி லிருந்து அவர்கள் தாம் செல்லும் இடத்தைப் பிறர் எவரும் பாராம லிருக்கின்றார்களா என்று தம்மை உறுதிப்படுத்திக் கொள்ளு கின்றார்களென்று அறிந்தோம். அவ்வாறு நோக்கியபின் அவர்கள் அச்சிறு குன்றின் அப் பக்கத்தே இறங்கி மறைந்து போனார்கள். இன்றைக்கு வெள்ளிக்கிழமையாதலால் இக்கள்வர் போனார்கள்.இன்றைக்கு களெல்லாரும் ஒன்றுசேரும் பொருட்டுப் போகிறார்கள் போலும். இன்னுஞ் சிலரும் இனி வரக்கூடும். ஆதலால், அக் குன்றின் அருகேசென்று பார்ப்பது எங்ஙனம்! என்று எண்ணமிட்டுக் கொண்டு அதன் கிட்டச் செல்லாமலிருந்தோம். இப்போது யாங்களிருந்த இடத்திலும் பதுங்கித்தான் இருந்தோம். இங்ஙனமிருந்தது நல்ல காலமாயிற்று. பின்னுஞ் சிறிதுநேரத்தில் பின்னும் இரண்டு பேர் வேறொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/280&oldid=1582572" இலிருந்து மீள்விக்கப்பட்டது