உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் -14

இருவரையும் அழைத்துச் செல்லுதல் ஆகாதென்று சேவகர்களும் அதிகாரியுஞ் சொல்லினார்கள். தங் கணவனார் உயிர் இடரான நிலையி லிருக்கும்போது தாம் இங்கிருக்க இயலாதென்றும், தாம் இப்போது ஆண்கோலம் பூண்டிருத்தலால், தம் காதலரையும் என் தமையனாரையும் மீட்கும் பொருட்டுத் தாமுங் கத்தி யெடுத்துச் சண்டைசெய்ய வேண்டுமென்றும் அப்பாரசிக அன்னையார் மொழியவே, என்பொருட்டுச் சிறையிலகப்பட்ட அவ்விரு வரையும் மீட்கும் பொருட்டு யானும் ஒரு பெருங்கிளர்ச்சி யுடையேனாய்க் கத்தி யெடுத்துச் சண்டை செய்ய உறுதிமொழி புகன்றேன். யாங்கள் இருவேமுங் கூறிய சொற்களைக் கேட்டு ஆடவரெல்லாரும் புன்சிரிப்புக் கொண்டனர். ஆயினும், யாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை. அவர்களோடு உடன்செல்லுவதற்கு விடாப்பிடியாய் நின்றோம். அவர்கள் எங்களையுங் கூட்டிப்போக இசைந்து, எங்களை யாங்கள் காத்துக் கொள்ளும் பொருட்டாக இரண்டு நீண்ட கூர்ங்கத்திகளையும் எங்கள் கையிற் கொடுத்தார்கள்.

முதலில் அவ் வதிகாரியும் முன்னே அவரோடு கூடச் சென்ற சேவகரும் அப் பாறைக் கீழ்வாயிலின்கீழ் இறங்கிச் சன்றார்கள். அவர்கட்குப் பின்னே இவ்விரண்டு பெயராக எல்லாச் சேவகர்களும் எங்கள் ஆட்களில் நால்வரும் அதனுள்ளிறங்கிச் சென்றார்கள்; அவர்கட்குப் பின்னே அம்மையாரும் யானும் அதனுள் இறங்கினோம்; எங்கட்குப் பின்னே எங்கள் ஆட்களில் எஞ்சிய இருவர்வந்தனர். யான் அக்குகையிலிருந்தபோது காலை மாலை யான் வெளியே சென்ற வழியாய் இது காணப்படவில்லை. ஆனாலும், அந்தவழி பகற்காலத்தும் இருளாயிருந்தமையால், இப்போது அங்ஙனமே இருளாய்த்தோன்றும் இந்த வழிக்கும் அதற்கும் வேறுபாடு மிகுதியாய்த் தென்படவில்லை. அந்தவழி நிரம்ப வளைந்து வளைந்து சென்றது,இந்த வழி சிற் சில இடங்களிற் றவிரப் பரும்பாலும் நேராகவே சென்றது. சிறிது வழிநடந்ததும் முன்னே சென்ற அதிகாரி எல்லார்க்குங் கடைசியில் வந்த எங்கள் ஆட்கள் இருவரைநோக்கிக் கண்ணாடி விளக்கை ஏற்றிப்பிடித்து வரும்படி கற்பித்தார். இப்போது எங்கட்குப் பின்னே யிருந்து தோன்றிய விளக்கு வெளிச்சம் முன்னே செல்லும் எங்கட்கு வழியை நன்கு காட்டியது. ஒருகால் எங்கட்கு எதிர்முகமாய்க்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/283&oldid=1582576" இலிருந்து மீள்விக்கப்பட்டது