உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

255

கள்வர் எவரேனும் வந்தாலும், பின்னே பிடிக்கப்பட்டிருக்கும் எங்கள் விளக்கு வெளிச்சத்தை அவர்கள் காணல்முடியாது. மலையினூடு செல்லும் இவ்வழியே போகையில் இடையிடையே இரண்டிடங்களில் இரண்டு வேறு வழிகள் காணப்பட்டன. அவ்விடங்களில் வந்தவுடன் ‘நேரே செல்வதா பக்கத்தே திரும்பிச் செல்வதா?' என்று மலைத்து நின்றோம் ஆனால் அவ்வதிகாரி ஆழ நினைந்து பார்த்து ‘நேராகச் செல்லும் இவ் வழிதான் அக்காளிகோட்டத்திற்குச் செல்லும் வழியா யிருக்கவேண்டும். இடையே காணப்படும் இவ்வழிகள் இவ்விடத்தைக்கடந்து வெளியே செல்வனவா யிருக்க வேண்டும். எவரேனுந் தம்மைப் பிடிக்கவந்தாற் பல முகமாய்ப் பிரிந்தோடு வதற்கு ஏற்ற பலவழிகள் இம்மலைக் குகைக்கு இயற்கையாக அமைந்திருத்த லாற்றான், அக்கள்வர்கள் இவ்விடத்தின்கண் உள்ள குகையில் ஒன்று கூடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அக்குகையி னுள்ளே அவர்களிருக்கும்போது அவர்களைப் பிடித்தாற்றான் பிடித்தபடிஅக் குகைக்கு வெளியே வந்தால் அவர்களைப் பிடிக்க முடியாது; இங்கே காணப்படும் பலவழியாய் ஒடிப்போவார்கள்!” என்றார். இவர் கடைசியாகச் சொல்லியசொல் முடிந்தவுடனே, எங்கட்கு எதிர்முகமாயிருந்து இருவர் பேசிக் கொண்டு வரும் ஒலி எங்கள் எல்லார்க்குங் கேட்டது. உடனே, அவ்வதிகாரி மிக மெல்லிய குரலில் "இரண்டுபேர் மட்டும் பேசிக்கொண்டு வருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் இங்கிருந்து பிரியும் க்கிளைவழியில் திரும்பினாலுந் திரும்புவர். ஆதலால், நாம் எல்லாரும் பின்நோக்கிச் சென்று இவ்வழிக்குச் சிறிது எட்ட இருந்து, இவர்கள் அக்கிளை வழியில் திரும்பினால் பின்பற்றிச் சன்று அவர்களைப் பிடித்துக் கொள்வோம். இவ் வழியே நேரே வருவார்களானாலும் எதிர்த்துப் பிடித்துக்கொள்வோம். இவ் வழியிற் பிடித்தால் இவர்கள் கூச்சலிட்டுக் குகையினுள் ளிருப்பவர்களையெல்லாம் ஓட்டி விடுவார்கள். கிளைவழியில் இவர்கள் போம்படி நேருமாயின், இவர்களைப் பிடிப்பது அந்தக் கலவரத்திற்கு இடஞ்செய்யாது". என்றுகூறி எங்களோடும் பின் தாங்கிச் சென்றார். அக்கிளைவழிக்குச் சிறிது எட்டவந்து எல்லாருமாய் நின்றோம். இப்போது விளக்கு வெளிச்சம் சிறிதுந் தெரியாதபடி தடித்த துணியிட்டு மறைத்துக் கொண்டோம். சிறிது நேரத்தி லெல்லாம் எதிரே பேசிக்கொண்டு வருவோர் யாங்கள் கண்ட கிளைவழி ஒன்றில் திரும்பும் அரவம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/284&oldid=1582577" இலிருந்து மீள்விக்கப்பட்டது