உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

❖LDM MLDMELD-14❖

அந்தப்

குரல் ஒலியால் ஆண்டில் முதிர்ந்தவராய்க் காணப்பட்ட ஒருவர் தம்முடன்வரும் மற்றொருவரைநோக்கி “அப்பா குமார சாமி, உன்னிடம் புதிதாய் வந்திருக்கும் அந்தப் பார்ப்பாரப் பேயர் இருவரும் நம்மிடம் உள்ள கள்வர்களைவிடக் கொடியவர்களா யிருக்கிறார்களே! ஐயோ! பார்சிக்காரனும் அவனோடு பிடிபட்ட பார்ப்பாரப் பையனும் எவ்வளவு நல்லவர்கள்! தம்மை விடுதலைசெய்து விடுவதற்காக லட்சரூபாய்க்குச் சொல்லுறுதிச் சீட்டு அந்தப் பார்சிக்காரன் எழுதிக்கொடுத்திருக்கிறானே! அவ்வளவோடு அவர்களை விட்டுவிடாமல், அவர்கள் இருவரையும் இப்போது கொன்று விடும்படி அந்தக் கள்ளப்பயல்களை யெல்லாந் தூண்டிவிட்டிருக் கிறார்களே! அது மட்டுமா! நமக்கும் அந்தக் கள்ளப் பயல் களுக்கும் பகையையும் விளைத்து வருகிறார்களே! அவர்களோடு பகைத்துக்கொண்டு நாம் இந்த மலைப்பிரதேசத்தில் எப்படி உயிரோடிருப்பது!” என்று வருத்ததத்தோடு கூறினார்.

அக்குரலொலியைக் கேட்டவுடன் எனக்கும் எம் அம்மை யார்க்கும் உயிர் உடம்பைவிட்டுப் போனது போலாயிற்று. அந்தப் பாரசிகப் பெருமானையும் என் தமையனையுங் கொல்லுங் கொலைக்கஞ்சா அந்தக் கொடுங்கள்வர் இதற்குள் கொன்று விட்டார்களோ! என்று எங்கள் உடலம் பதறியது.யான் அம்மையாரைப் பிடித்துக்கொண்டேன்; இல்லையேல் அவர் களைத்து வீழ்ந்திருப்பார்.யாங்கள் பேசக்கேட்ட பெரியவர் இந்தக் குகைக்காளிகோட்டத்தில் எனக்கு ஆறுதல்சொன்ன பூசகரே யல்லா மற்பிறர் அல்லர். இதற்குள் அப்பெரியவர் கூட வந்தவன் அவர்க்கு விடை கூறுவது கேட்டது. அவ்விரு வருங்கிளை வழியிற் செல்லாமல் நிற்கலாயின ரென்பது தோன்றிற்று.

“அப்பா, அந்தப் பார்ப்பாரப்பயல்கள் செய்ததுநமக்கு நன்மையாய் முடியும் என்று நினைத்தேன்! அவர்களுடைய தூண்டுதலால் யான் கொண்டுவந்த தேவமாதுபோன்ற அந்தப் பார்ப்பாரப்பெண்ணை யான் கல்யாணம் செய்துகொள்ளலா மென்றும், உயர்ந்த குணம்உடைய அந்தப் பார்சிக்கனவானிட மிருந்து பத்தாயிரரூபா வரையில் அந்தப் பயல்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு, நம்மோடு சேர்ந்த கள்ளப் பயல்களுக்குந்தக்க பொருளுதவி புரிந்தபின் அவர்களை விடுதலைசெய்து, நாமெல்லாம் இந்தத் தொழிலைவிட்டு நல்வழியிற் செல்லலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/285&oldid=1582578" இலிருந்து மீள்விக்கப்பட்டது