உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

257

மென்றும் நினைத்தேன். இந்தக் கருத்தை அந்தப் பார்ப்பாரப் பயல்களுக்கு நான் மெல்லத் தெரிவிக்க, அதற்கு அவர்கள் உடன்படுவதுபோற் பாசாங்குகாட்டிப், பிறகு எனக்குத் தெரியாமல் இரண்டகமாய் நம்ம கள்ளப்பயல்களுடன் கலந்து வேறு வேறு சூழ்ச்சிகளெல்லாஞ் செய்திருக்கிறார்கள். நாம் காளிகோயிலிற் கொண்டுவந்து வைத்திருந்த அந்தப் பெண் எப்படியோ மாயமாய்ப் போய் விட்டாளே! அவள் காணாமற் போன அன்றைக்கே என் உயிர் அரைவாசி போய்விட்டது. அப்பா, அவளை அந்தக் குகையிலே வைத்துப் பூட்டிக்கொண்டு வந்தபின் அவள் எப்படி வெளியே போகக் கூடும்! அவள் தப்பிப் போவதற்கு வழி இல்லையே! என்று கேட்டான்.

வி

இப்போது இங்ஙனம் பேசுகிறவன் அந்தப் பூசகர் மகனே யல்லாமற் பிறர் அல்லர் என்பதனைத் தாங்கள் அறிந்து கொள்வீர்கள்.

66

உடனே அந்தப் பெரியவர் 'குமாரசாமி, உனக்கு வஞ்சகமாய் நான் ஏதும் செய்யவில்லை. ஊழ்வினை வசத்தால் நீ இந்தக் கள்வர் கூட்டத்திற் சேர்ந்து கொள்ளும்படி நேர்ந்த போதும் நான் அதற்கு உடன்பட்டிருந்தேன்.உன்பொருட்டு அந்தப் பெண்ணின் மனத்தைக் கரைத்துப் பார்த்தேன். அவள் கற்பிலுங் கல்வியிலுஞ் சிறந்த உத்தமியா தலால் உன்னை விவாகஞ்செய்து கொள்ள இணங்கவில்லை. அதன்மேல் அவளையும் அவளைச் சேர்ந்தவர்களையும் விடுதலைசெய்து விட்டு அவர்களுதவியால் நாமும் நல்வழியில் திரும்பலாம் என்று பலகால் உன்னிடம் சொன்னேன். நீயோ ஒருகால் என் பேச்சுக்கு இணங்குவதும், மற்றொருகால் அதனை மறுப்பதுமாக இருந்தாய். ஆனாலும், நானே அந்தப் பெண் குகையைவிட்டுப் போகாமல் எவ்வளவோ குறிப்பாய்த்தான் காத்துவந்தேன். ஆகையால், என்மேற் குற்றமில்லை” என்றார்.

66

பயல்கள்

அப்படியானால், அந்தக் குகைக்கதவின் சாவி அந்தப் பார்ப்பாரப் கையிலாவது, கள்ளப் பயல்கள் கையிலாவது அகப்பட்டிருக்கக்கூடுமோ?" என்று அவர் மகன்

வினாவினான்.

66

'நமது வீட்டில் நான் மிகவும் மறைவாய் வைத்திருந்த அந்தச்சாவி எவர்கையிலும் அகப்பட்டிருக்க முடியாது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/286&oldid=1582580" இலிருந்து மீள்விக்கப்பட்டது