உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

❖LDMMLDMOшILD -14❖

தப்பிப்போனது ஏதோ தெய்வச்செயலாய் இருக்கின்றது. நம் அறிவுக்குத் தென்படாததைப் பற்றி நாம் வீணே பலவாறாக எண்ணுவதிற் பயனில்லை. அது நிற்கட்டும்: சிறந்த இரண்டு உயிர்களை இந்த இரவு மடிக்கக் கங்கணங் கட்டிக்கொண்டிருக் கிறார்களே. அதை நிறுத்த முடியாதா?” என்று அப்பெரியவர் உருக்கத்தோடுங் கேட்டார்.

பார்ப்பார்

என்று

வி

“என்னை அவர்கள் கலந்து பேசியபோது, அந்தப் இருவருந் தமக்கு ஓர் இலட்சம்ரூபா எழுதிவாங்கிக்கொண்டு அவர்களை விடுதலை செய்துவிடலாம் று சொன்னேன். முதலில் அதற்கு இசைந்த அப்பேய்கள் இரண்டும் பிறகு 'அப்படி எழுதிவாங்கிக் கொண்டபின் அவர்களிருவரையும் மடித்துவிட வேண்டுமேயல்லாமல், டுதலைசெய்தல் பிசகு; அவர்களை விட்டுவிட்டால் நம் எல்லாரையும் அரசாங்கத்தாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவார்கள்' என்று சொல்லின. அந்தப் பார்சிக் கனவான் சொல்லுறுதி தவறாதவராகக் காணப்படுகின்றனர்; அவருடனிருப்பவனும் அவர் சொற்படி நடக்குஞ் சிறந்தகுண முடையவானா யிருக்கிறான். ஆதலால், வீணே அவர்களைக் கான்று பாவத்தைத் தேடாமல் விடுதலைசெய்வதே நல்லது என்று நான் வற்புறுத்திப் பேசினேன். அவர்கள் என் பேச்சைக் கேளாமல் தாம் விரும்பியபடியேதான் செய்யவேண்டுமென்று முடிவாகக் கூறினார்கள். நம்மைச்சேர்ந்த கள்வர்களும் அவ்விருவர் கருத்துக்கு இணங்கிச் சொல்லவே, எனக்கு மனந்தாளாமல் ‘நீங்கள் எப்படியாவது செய்துகொள்ளுங்கள், இனி நான் இங்கிருக்க முடியாது.' என்று சொல்லிவிட்டு உனக்குப் பிறகே வந்தேன். அவ் விருவரிடமும் லட்சரூபாய்க்கு எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கொன்று விடுவார்கள்!” என்று அவர் மகன் சொன்னான்.

6

அந்தப் பெரியவர் "அவ்விருவரையுங் காக்க வேறு வழி இல்லையா?” என்று வினவினார்.

"இப்போது நான் கையிற் கத்தியோடு அவர்கள் நடுவிலே சடுதியிற்போய் விழுந்து அவர்களைச் சின்னாபின்னமாக வெட்டிக் கொன்றால், அவ்விருவரையும் மீட்கலாம். அப்பா, விடைகொடுக்கிறாயா?” என்று ஆண்மையோடு கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/287&oldid=1582581" இலிருந்து மீள்விக்கப்பட்டது