உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கோகிலாம்பாள் கடிதங்கள்

259

ஐயோ, மகனே, நீ ஒருவன்தானே இருக்கின்றாய். தள்ளாத எங்களுக்கு வேறு துணையில்லையே. அத்தனை கள்வர்களும் ஒருகால் ஒன்றுசேர்ந்து உன்னைக் கொன்றுவிடுவார்களானால், எங்கள் கதி எப்படியாகும்! உனக்குத் துணை கிடைத்தால்-” என்று அப்பெரியவர் சொல்லிப் பின்னும் பேசுவதற்குள், அவ்வதிகாரி மின்னல் வீச்சுப்போல் அவ்விருவரிடமுஞ் சென்று இதோ! நான் துணைவருகின்றேன்! வா என்று தமக்குரிய மகாராட்டிர மொழியிற் கூறினார்.

66

அவ்விருவரும்

அக்கிளைவழியில் நின்று தமிழிற் பேசுகையில் என் பாரசிக அம்மையார் அந்த அதிகாரியின் கிட்டச்சென்று, அவர்கள் பேசியவைகளையெல்லாம் மகாராட்டிரத்தில் மொழி பெயர்த்து அவர் காதுக்குட் சொல்லிக்கொண் டிருந்தார்.

அங்ஙனந் தன்னிடம் பாய்ந்து வந்த அவ் வதிகாரியை நோக்கி “நீ எனக்கு நண்பனா? பகைவனா?” என்று அந்தப் பெரியவர் மகன் கேட்டான்.

“நான் உனக்கு நண்பன்!” என்று அவ்வதிகாரி சொல்ல, உடனே அப்பெரியவர் மகனும் அவற்குப் பின்னே அவ்வதிகாரியும் அக்கிளைவழியைவிட்டு, நேர்வழியே காற்றினுங் கடுகிச் சென்றார்கள். நானும் என் அம்மையாரும் ஒரு கிளர்ச்சியால் உந்தப்பட்டு அவ் விருவரையும் பின்பற்றி ஓடினோம். மற்ற ஆடவர்களெல்லாரும் எங்கட்குப் பின்னை விரைந்து வந்தார்களாயினும், நாங்கள் அவர்களையாவது அவர்கள் எடுத்துவரும் விளக்கினுதவியையாவது திரும்பிப்பாராமல், கால் நிலத்திற் பாவுகிறதோ இல்லையோ என்னும்படி அத்தனை விரைவாய்ச் சென்றோம். அவ்வழி முற்றும் இருளாயிருந்தாலும் முன்னே செல்பவர் அவ்வழியை நன்கு தெரிந்து செல்வதால் நாங்கள் அவர்கட்குப் பின்னே வருத்தமின்றிச் சென்றோம்.நாங்கள் ங்ஙனம் பின்னே வருவது முன் விரைந்தேகும் அப்பெரியவர் மகனுக்குந் தெரியாது. சிறிதுநேரத்திள் எல்லாம் குகைவாயிற் கதவண்டை அப்பெரியவர் மகனும் அதிகாரியுஞ் சென்றார்கள். அக்கதவு தாழிடாமல் வறிதே சாத்தப்பட்டிருந்தமையால் அது சடுதியிற் படீரெனத் திறக்கப்பட்டது. அது திறந்தவுடன் உள்ளேயிருந்த விளக்கினொளியால் அங்கேயிருந்த எங்கட்குத் தெரிந்த கொடுங் காட்சியின் தீதினை என்னென்பேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/288&oldid=1582583" இலிருந்து மீள்விக்கப்பட்டது