உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

கோகிலாம்பாள் கடிதங்கள்

L

263

ச்

தப்பிவந்து எங்களை இங்கே அழைத்து வந்தாள்!' என்று ஒருவாறு தமது மனத்தைத் தேற்றிக்கொண்டு கூறினார். இ சொற்களைக்கேட்டு என் தமையன் என் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டான். யாங்கள் இந்நிலையிலிருக்க, எங்களுக்கு எதிர்ப்பக்கத்தே சண்டை நடந்த இடத்தில் அந்தப் பெரியவர் மகன் காயப்பட்டுக் களைத்து உணர்விழந்து கிடத்தலின் அவனுக்கு எங்களுடன்வந்த ஆடவர் களெல்லாரும் பரிகாரஞ் செய்துகொண்டிருந்தனர். இப்போது என் அம்மையார்க்கு உறவினரான ஆட்கள் அறுவரும் தமது நிலை தமக்கு வரப்பெற்றவர்களாய், எங்கள் பாரசிகப் பெருமானிடம் வந்து வணங்கினர். இந்நேரத்தில் அப்பெரியவர் குகையினுள் மெல்ல நடுக்கத்தோடும் வந்து தம் மகன் காயத்தால் இரத்தஞ்சோர உணர்விழந்துகிடப்பதைக் கண்டு ஆற்றப்பெறாத துயரம் மிக்கவராய் “அப்பா, குமாரசாமி தள்ளாத எங்களைக் கைவிட்டாயோ!" என்று அங்கிருந்தவர் எல்லாரும் மனங்கரைய அழுதார். 'குமார சாமி' என்னும் பெயரையும், அப் பெரியவர் குரலொலியினையுங் கேட்டதும் என் அம்மையார் திடுக்கிட்டு அவரிருந்த முகமாய்த் திரும்பிநோக்கினார். இதற்குமுன் கிளைவழியில்நின்று அப் பெரியவர் தம் மகனுடன் பேசியதைக் கேட்டபோதும் அம்மையார் இங்ஙனமே திடுக்கிட்டார்.சடுதியில் அம்மையார் தமது பாரசிக மொழியிற் சிலவற்றைத் தங் கணவனார்க்குச் சொல்ல, அவரும் அன்னையாரும் அப் பெரியவரிடஞ் சென்றனர்; யானும் என் தமையனும் அவர் பின்னே சென்றோம். அப்பெரியவர் கீழே கிடக்குந் தம் மகன்மேல் குனிந்து வருந்த எங்கள் சேவக ரெல்லாரும் அவ்விருவரையுஞ் சூழ்ந்துகொண்டு நின்றனர்; அவ்வதிகாரி காயங்களில் ஒழுகும் இரத்தத்தை நிறுத்தல்வேண்டி அவற்றைத் துணிகளாற் கட்டிக் குளிர்ந்தநீரை விட்டு நனைத்துக் கொண்டே யிருந்தார். யாங்கள் அவர்களிடஞ் சென்றதும், பாரசிகப் பெருமான் எங்கள் ஆட்களிடமிருந்த ஒரு விளக்கை வாங்கி, அதன் ஒளி அப்பெரியவர் முகத்திலும், அவர் தம் மகனார் முகத்திலும் படும்படிபிடித்தார். அவ்விருவர் முகங்களையும் நோக்கவே, என் அம்மையார் உடலம் பதறி அப் பெரியவர் பக்கத்திற்போய்க் கீழேகுந்தி அவரது கையைப் பிடித்து “அப்பா!” என்று நடுங்கிய குரலிற் கூறிப் பின்னர், அவரது மகனாரைச் சுட்டி "இவன் நம்ம அண்ணா குமாரசாமியா?” என்று அழுதபடியே வினவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/292&oldid=1582588" இலிருந்து மீள்விக்கப்பட்டது