உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 14.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோகிலாம்பாள் கடிதங்கள்

.

265

நேரவில்லை யென்று கூறினார். அதன்மேல், ஒரு விளக்கைக் கையிலெடுத்துக் கொண்டுபோய் அவ் விருவரையும் உற்றுப் பார்க்கும்படி என் தமையனை வேண்டினேன். வெட்டுண்டு கிடக்கும் அப்பிணங்களிரன்டையும் போய்ப்பார்க்க அச்சமும் அருவருப்பும் உற்று முதலில் அவன் பின்வாங்கினானாயினும், பின்னர் என் வேண்டுகோளுக்கு இசைந்து அவன் அவர்களிடஞ் செல்லவே, யானும் அவன்பிற்சென்று அவ்விருவர் பக்கத்தும் நின்றேன். என் தமையன் பிடித்த விளக்கினொளி அவ்விருவர் முகங்களிலும் பட்டது. ஐயோ! இப்போது என் கண்ணெதிரே தென்பட்ட அவ்விரண்டு முகங்களையும் பார்த்ததும் என்னை மறந்து "ஐயோ! ஐயோ! என்று அலறினேன். என் தமையன் “ஓ! அப்பா! ஈதென்ன பொல்லாத காலம்!' என்று இரைந்து கூவினான்.உடனே அந்தப் பாரசிகப் பெருமானும் பெருமாட்டி யாரும் எம்மண்டை வந்து நோக்கினார்கள். அவர்களும் அவ்விரண்டு முகங்களையும் பார்த்ததும் “ஐயோ! இதென்ன கொடுமை!” என்று சொல்லிப் பெரு வியப்புற்றுத் திகைத்து நின்றார்கள்.யானோ கண்ணீர்விட்டு “அப்பா! அப்பா!” என்று கதறினேன். இப்போது அப்பெரியவரும் என் பக்கத்தேவந்து அவ்விருவரையும் பார்த்தார். ஆனால், அவர்க்கொன்றும் புலப்படவில்லை. அதன்மேல் அவர் என்னை வியப்புடன் நோக்கி அம்மா, நீ ஏன் இந்தப் பாவிப் பயலுக்காக இவ்வளவு வருத்தப்பட்டு அழுகின்றாய்? உண்மையை ஒளியாமற் சொல்லு!' என்று கேட்டார்.யான் என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “பாட்டா, இவர் என்னைப் பெற்ற தகப்பனார்! இதோ அவர் பக்கத்திற் கிடப்பவன்றான் இவ்வளவு துயரத்திற்குந் துன்பத்திற்குந் காரணமான சேதுராமன் என்பவன்; வனைப் பற்றித்தான் பேதையேன் முதலிலிருந்தே ஐயப்பட்டு வந்தேன். இவனாலேதான் என் தந்தை மடிந்தார்!” என்று அழுது காண்டே சொன்னேன்.என்சொற்களைக் கேட்ட அப்பெரியவர் ஐய முற்றவராய் “என்ன குழந்தாய், இந்தப் பாதகன் உன் தகப்பனா! ஓ! ஓ! நான் நம்பமாட்டேன். இந்தக் கொடியவனுக்கு இவ்வளவு உயர்குணமும் அழகும் வாய்ந்த நீ பிள்ளையாய்ப் பிறந்திருக்க முடியாது.நீ ஏதோ ஆள்மாறாட்டத்தால் இவனை உன் தந்தையாக நினைத்து வருந்துகிறாய்!” என்றார். இதற்குள் என் தமையன் “இல்லை, இல்லை, இவர் எங்கள் தகப்பனார் தாம்!” என்று உறுத்திச் சொன்னான். அதன்மேல், அவர் என்னையும் என்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_14.pdf/294&oldid=1582590" இலிருந்து மீள்விக்கப்பட்டது